மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி : அஜீத்துடன் இணையும் ஆக்சன் கிங்

இயக்குநர் வெங்கட்பிரபுவின் கேரியரை உயர்த்திய படம் எதுவென்றால் அது மங்காத்தா தான். அஜீத்தின் 50 -வது படமான உருவான மங்காத்தா வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று அதுவரை அஜீத் கொடுத்த தோல்விகளுக்கு ஒட்டுமொத்தமாக பதிலடி கொடுக்கும் விதமாக பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியது. ஆன்ட்டி ஹீரோவாக அஜீத் வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார்.

அதற்கு யுவன்சங்கர்ராஜா இசையும் படத்திற்கு முதுகெலும்பாக அமைய அஜீத் படங்கள் இதுவரை தொடாத உச்சத்தைத் தொட்டது. மேலும் ஆக்சன் கிங் அர்ஜுனும் இப்படத்தில் அஜீத்தின் நண்பராக நடித்திருப்பார். கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ஆக்சன், மேக்கிங் என அனைத்திலும் மிரட்டியது.

தற்போது அஜீத் தற்போது துணிவு படத்திற்குப் பிறகு விடாமுயற்சியில் நடித்து வருகிறார். அசர்பைஜான் நாட்டில் இப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய்க்கு வாரிசு படத்திற்குப் பின் அறிவிக்கப்பட்ட லியோ உடனடியாக ஷுட்டிங் முடிந்து படமும் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. ஆனால் அதே துணிவு படத்திற்குப் பின் அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி பர்ஸ்ட் லுக் போஸ்டருடனே நிற்கிறது.

நடிக்க வந்து 10 வருஷம் ஆச்சு..! சான்ஸுக்காக கீர்த்தி சுரேஷ் போடும் புது ரூட்

இயக்குநர் மகிழ்திருமேணி இயக்கும் இப்படத்தில் தற்போது அஜீத்துடன் மீண்டும் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அண்மையில் வெளியான லியோ படத்திலும் ஹெரால்டு தாஸ் கேரக்டரில் போதை மருந்து கடத்தல் மன்னன் வேடத்தில் நடித்த அர்ஜுன் தற்போது மீண்டும் மங்காத்தா படத்திற்குப் பின் அஜீத்துடன் இணைய உள்ளார்.

மங்காத்தாவில் அஜீத்தின் நண்பராக நடித்த அர்ஜுன் இதில் அவருக்கு வில்லனாக நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜீத் ரசிகர்கள் மீண்டும் மங்காத்தா போன்ற ஒரு வேற லெவல் படத்தைப் பார்க்கலாம் என ஆவலுடன் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.

தேச பக்திப் படங்களில் நடித்து இளைஞர்களிடம் தேசபற்றை வளர்த்த அர்ஜுன் இப்போது பல படங்களில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்திலும் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews