நடிக்க வந்து 10 வருஷம் ஆச்சு..! சான்ஸுக்காக கீர்த்தி சுரேஷ் போடும் புது ரூட்

பாரம்பரிய திரைக்குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர்தான் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் மலையாளத்தில் கீதாஞ்சலி படம் மூலம் திரைக்கு வந்தவர். தமிழில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே தோல்வியைத் தழுவ பின்னர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.

ஏற்கனவே வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் ஹிட்டால் சிவகார்த்திகேயன் குடும்ப ஆடியன்ஸ் ஹீரோவானார். அந்த வகையில் ரஜினிமுருகன் படமும் கைகொடுக்க கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் நிலையான இடம் கிடைத்தது.

தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடிக்க இதுவும் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது. இதன்பின் கீர்த்தி சுரேஷ் பிஸியான நடிகையானார். அதன்பின் சர்கார், மகாநடிகை, அண்ணாத்த, மாமன்னன், சாணிக் காகிதம் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக் கொணர்ந்தார்.

சினிமாவுக்கு வந்த புதிதில் ஹீரோக்களின் மனைவிகளுடன் தோழமையாகப் பழகி பின்னர் அந்த ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் தற்போது தனது மார்க்கெட் சற்று சறுக்கலாகி இருப்பதால் இயக்குநர்கள் வசம் தாவி விட்டார். முன்னணி ஹீரோக்கள் அவரை ஒதுக்க அட்லி போன்ற இயக்குனர்களின் மனைவிகளுடன் தோழமையை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் மூலம் ஹீரோயின் தூது விட்டு வருகிறார். இந்த ரூட் அவருக்கு நல்ல முறையில் ஒர்க்அவுட் ஆகி வருகிறது.

டைம் டிராவல் கதையில் தளபதி விஜய்? : வெளியான தளபதி 68 அப்டேட்

தற்போது கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிக்க வந்து 10 வருடங்களைக் கடந்த நிலையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் “என் திரையுலகப் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் என் அப்பா, அம்மாவுக்கு நன்றி, அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருக்க மாட்டேன். என் குரு ப்ரியன் அவர்களுக்கு நான் என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ளேன். என் திரையுலகப் பயணத்தின் தொடக்கத்திற்கானக் காரணம் அவர்தான்.

அதுமட்டுமின்றி என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், மீடியா நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. என் ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்களுக்காக நான் இன்னும் பல படங்கள் சிறப்பாக நடிப்பேன். இந்த நேரத்தில் என்னை ட்ரோல் செய்பவர்களுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவர்களின் விமர்சனங்களும் என்னை வளர்த்திருக்கிறது” என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...