16 வயதில் சினிமாவில் அறிமுகம்.. 17 வயதில் எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை மஞ்சுளாவின் திரைப் பக்கங்கள்..!!

தமிழ் திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரண்டு பெரிய நடிகர்களுடன் மாறி மாறி ஜோடியாக நடித்து பல படங்களில் குணச்சித்திர வேடஞ்களில் நடித்தவர் நடிகை மஞ்சுளா.

நடிகை மஞ்சுளா 1954 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி பிறந்தார். முதல் முதலாக சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார். ஜெமினி கணேசன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் மஞ்சுளா நடிக்கும்போது அவருக்கு 16 வயது தான்

அதன்பின் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க மஞ்சுளாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து அவரது மூன்றாவது படமே எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் படமாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டு வெளியான ரிக்சாக்காரன் திரைப்படத்தில் எம்ஜிஆர் ஜோடியாக நடித்தார். இந்த படம் வெளியான போது எம்ஜிஆருக்கு 53 வயது. அவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சுளாவுக்கு 17 வயது.

images 40

விஜயகாந்துக்கு முன்பே புரட்சிக்கலைஞர் பட்டம்.. ரஜினி படத்தில் ஹீரோ.. 80களில் கோலோச்சிய விஜயகுமார்..!

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி எம்ஜிஆருக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தில் எம்ஜிஆருக்கு பொருத்தம் இல்லாமல் மஞ்சுளா இருந்தாலும் அவர் கிளாமரில் கலக்கினார் என்பதால் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தது.

ரிக்சாக்காரன் படத்தின் வெற்றியை அடுத்து மஞ்சுளாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் எம்ஜிஆருடன் இதயவீணை திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு பூக்காரி என்ற திரைப்படத்தில் கலைஞர் மு கருணாநிதியின் மகனான முக முத்துவுக்கு ஜோடியாக நடித்தார்.

இதனை அடுத்து சிவாஜியுடன் அவர் இணைந்த முதல் திரைப்படம் எங்கள் தங்க ராஜா. இந்த படம் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது. சிவாஜியுடன் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

images 42

இதனை அடுத்து நடிகை மஞ்சுளா எம்ஜிஆரின் மிகப்பெரிய ஹிட் படமான உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடித்து இருந்தாலும் மஞ்சுளா கேரக்டர் தான் படத்தின் முதுகெலும்பாக இருக்கும். எம்ஜிஆருக்கு சந்திரகலா மற்றும் லதா ஆகிய இருவரும் கூடுதல் ஜோடியாக நடித்திருந்தனர்

உலகம் சுற்றும் வாலிபன் வெற்றிக்கு பிறகு சிவாஜியுடன் என் மகன் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் உடன் நேற்று இன்று நாளை முத்துராமனுடன் எல்லோரும் நல்லவரே சிவாஜியுடன் அன்பே ஆருயிரே எம்ஜிஆருடன் நினைத்ததை முடிப்பவன் சிவாஜியுடன் டாக்டர் சிவா, அவன் தான் மனிதன், மன்னவன் வந்தானடி, உத்தமன், அவன் ஒரு சரித்திரம் போன்ற படங்களில் நடித்தார்.

அன்பு நடமாடும் கலைக்கூடமே… சிவாஜியின் அற்புதமான நடிப்பில் உருவான அவன்தான் மனிதன்!

இந்த நிலையில் தான் ரஜினிகாந்த், ஜெய்கணேஷ் மற்றும் விஜயகுமார் ஆகிய மூன்று பேர் முன்னணி கேரக்டர்களில் நடித்த சங்கர் சலீம் சைமன் என்ற படத்தில் மஞ்சுளா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அப்போதுதான் அவருக்கும் விஜயகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் ஒரு கட்டத்தில் நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது. இந்த நிலையில் தான் இருவருக்கும் திருமணம் ஆனது. நடிகை மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று பேருமே திரை உலகில் நடித்தார்கள்.

images 41

திருமணத்திற்கு பின்னரும் மஞ்சுளா தனது நடிப்பை தொடர்ந்து வந்தார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவர் அம்மா வேடத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். விஜயகுமாருடன் மஞ்சுளா நடித்த படங்களில் ஒன்று சேரன் பாண்டியன். இந்த படத்தில் அவர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அதன் பிறகு விஜயகாந்த் நடித்த காவிய தலைவன், அரவிந்த்சாமி நடித்த தாலாட்டு, சிவகுமார் நடித்த சிறகடிக்க ஆசை, கார்த்திக் நடித்த லக்கி மேன், பிரபுதேவா நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் மஞ்சுளா நடித்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு படத்தில் நடித்த மஞ்சுளா அதன்பிறகு நீண்ட வருடங்கள் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து அவர் நடித்த திரைப்படம் தான் 2011 ஆம் ஆண்டு வெளியான என் உள்ளம் உன்னை தேடுதே. இதுவே அவரது கடைசி படமாகவும் அமைந்தது.

தேச பற்றா……? கதாபாத்திரமா…..? தியாகம் செய்த சிவாஜி….. எதற்காக தெரியுமா…..!!

நடிகை மஞ்சுளா கடத்த 2013 ஆம் ஆண்டு உடல் நல கோளாறு காரணமாக காலமானார். சினிமாவில் மட்டுமின்றி அவர் தொலைக்காட்சிகளில் சில சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்து, நடிப்பில் முத்திரை பதித்த நடிகை மஞ்சுளாவை தமிழ் திரை உலக ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...