நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!

ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாளின் அவதாரத் திருநாள். அதனால் ஆண்டாள் எழுந்தருளிய கோவில்களில் எல்லாம் ஆடிப்பூரம் உற்சவம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். அதே போல் அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும்.

சைவ ஆலயங்களில் எல்லாம் ஊஞ்சல் சேவை செய்து திருவிழா நடத்துவது மிக விசேஷமானது. அன்றைய தினம் அம்பிகைக்கு பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் நடைபெறுவது விசேஷம்.

அந்த வகையில் இந்த ஆண்டு 22.7.2023ம் தேதி அன்று ஆடிப்பூரம் வருகிறது. பெண்களுக்கு சீக்கிரமாகக் கல்யாணம் ஆக வேண்டும் என்றும், குழந்தை வரம் வேண்டும் என்றும் கேட்கும் நாள் தான் ஆடிப்பூரம். இந்த வழிபாடு எளிமையானது தான். ஆனால் அற்புதமானது.

எவ்வளவோ காலமாக பல விரதங்கள் இருந்தும் கிடைக்காத குழந்தை பேறு இந்த ஆடிப்பூரத்தில் கிடைக்கிறது. அப்படி ஒரு அற்புத சக்தி வாய்ந்த வழிபாடு இது.

எப்படி கொண்டாடுவது என்று பார்க்கலாமா…

Aandaal
Aandaal

22.7.2023 அன்று மாலை 04.02மணி வரை பூரம் நட்சத்திரம் உள்ளது. அதனால் பூரம் நட்சத்திரம் இருக்கிற நேரத்துக்குள்ளேயே இந்த வழிபாட்டை செய்து கொண்டால் ரொம்ப ரொம்ப விசேஷம்.

அன்று காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அல்லது காலை 10.35 மணி முதல் மதியம் 1.15 மணி வரை இந்த வழிபாட்டை செய்யலாம்.

நம் வீட்டில் உள்ள அம்பிகையின் ஒரு திருவுருவப்படத்தை (காமாட்சி, மீனாட்சி, மூகாம்பிகை என ஏதாவது ஒன்று) எடுத்து ஒரு மணப்பலகை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிகப்புத் துணி விரித்து அம்பாளின் படத்தை வைங்க. மஞ்சள், சந்தனம், பூக்களால் அலங்காரம் பண்ணுங்க. வளையல் மாலை சாத்த வேண்டும். ஒரு டஜன் கண்ணாடி வளையல் வாங்கியும் அம்பாளின் படத்திற்கு முன் வைக்கலாம்.

சிலையாக வைத்தால் அம்பிகையின் கையிலேயே போட்டு விடலாம். சந்தனம், குங்குமம், அம்பிகைக்கு கன்னத்திலும், பாதத்திலும் வைங்க. அதன் பிறகு நலுங்கு பண்ண வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பால், பழம் என ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக வைத்து பூஜை செய்யுங்க.

அதன்பிறகு அம்பாளின் படத்தை எங்கு மாட்டினோமோ அங்கு மாட்டி விடுங்கள். மணப்பலகையை வரவேற்பறையில் வைங்க. அதில் குழந்தைப் பேறு அல்லது கல்யாண வரம் வேண்டுபவர்களை கிழக்கு மேற்காக உட்கார வைங்க.

இது ஆண்களாக இருந்தாலும் செய்து கொள்ளலாம். அதே போல பெண்ணுக்கும் நலுங்கு வைக்க வேண்டும். மலர்கள், பன்னீர் தெளித்து சீக்கிரமா கல்யாணம் நடக்கணும். குழந்தை பேறு கிடைக்கணும்னு அம்பாளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். மணப்பலகையில் இருப்பவர்களும் அம்பாளிடம் பிரார்த்தனை பண்ண வேண்டும்.

குழந்தைப் பேறு கிடைக்க வேண்டுபவர்கள் எனக்குத் தாயாக நீ வரம் தர வேண்டும் என உள்ளம் உருகி பிரார்த்திக்க வேண்டும். இது நிச்சயம் உங்களுக்கு கை மேல் பலன் தரும்.

வீட்டில் உள்ள பெரியவங்க அவங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க. பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க.

தேங்காய், 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு இவற்றை அந்தப் பெண்ணின் முந்தானையில் அதாவது மடியில் கட்டிக் கொள்ள வேண்டும். அவர்கள் பூஜை அறைக்குச் சென்று அம்பாளிடம் அடுத்த ஆண்டு எனக்கு குழந்தை வரம் வேண்டும் என்று உள்ளன்போடு வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்து அந்தத் தேங்காயை இனிப்பு பொருள்கள் செய்ய பயன்படுத்தலாம்.

Aadipooram 3
Aadipooram 3

வாழைப்பழத்தை சாப்பிட்டு விடலாம். அன்று உபவாசம் இருக்க முடிந்தால் இருக்கலாம். இது காலையில் செய்ய வேண்டியது. மாலையில் பக்கத்தில் உள்ள அம்மன் கோவில்களுக்குச் செல்லுங்கள். அங்கு வளைகாப்பு, ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அங்கு முடிந்த அளவு கண்ணாடி வளையல் வாங்கிப் போய் அம்பாளுக்குச் சாத்துங்க. அர்ச்சகர் அம்பாளுக்குச் சாத்தியது போக மீதத்தைப் பிரசாதமாகத் தருவாங்க.

யாருக்கு நீங்கள் கல்யாணம் வேண்டி வருகிறார்களோ, குழந்தைப் பேறு வேண்டி வருகிறார்களோ அவர்களுக்கு கொடுக்கலாம். மற்ற பெண்களுக்கும் கொடுக்கலாம். திருமணமும் தடை படாமல் சீக்கிரமாக நடக்கும். இதை சரியாக செய்பவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...