பிறந்து ஒரு வருடம் கழித்து தன் குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு காட்டிய பிரபல இயக்குனர்..

அட்லி இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். மேலும், நடிகர் விஜய்யை வைத்து தெறி(2016), மெர்சல்(2017), பிகில்(2019) ஆகிய படங்களை இயக்கினார்.

இயக்குனர் அட்லி தமிழில் சில படங்கள் இயக்கியிருந்தாலும் லேட்டஸ்ட்டாக நடிகர் ஷாருக்கானை வைத்து இந்தியில் அவர் இயக்கிய ஜவான் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகளவில் ரூ. 1,160 கோடி வசூலித்தது.

atlee4

இயக்குனர் அட்லி 2014 ஆம் ஆண்டு பிரியா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஜனவரி 2024 இல் தங்கள் குழந்தையின் முதல் பிறந்தநாளை கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேன்ட் பார்க்கில் வைத்து கொண்டாடினர். குழந்தையை பார்பதற்கு அவர் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.அப்போது கூட குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு காட்டாமல் இருந்தனர்.

atlee2 atlee3

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அட்லி- பிரியா தம்பதியர் தங்கள் குழந்தையுடன் அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜாம்நகர் சென்றிரங்கிய வீடியோ தான் அது.

அதில் அட்லி மற்றும் பிரியா தம்பதியர் தங்கள் குழந்தை மீர்-ஐ பத்திக்கையாளர்களுக்கு காண்பித்தனர். அதை பார்த்ததும் அட்லியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews