சூர்யா ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொன்ன உண்மை..ரகசியத்தை உடைத்த சிவக்குமார்!

தமிழ் சினிமாவின் தென்னகத்து மார்கண்டேயனாகவும், 80 வயதைக் கடந்த நிலையிலும் இன்றும் இளைஞர் போல் சுறுசுறுப்பாகவும் வலம் வரும் பழம்பெரும் நடிகர் தான் சிவக்குமார். தனது நடிப்பாற்றலால் அந்த கால கதாநாயகிகளின் முன்னனி ஹீரோவாகவும், பெண்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் விளங்கியவர். நடிப்பு மட்டுமல்லாது ஓவியம், சொற்பொழிவு, இலக்கியம் என பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவர்.

இன்று அவரைப் போலவே அவர்களது புதல்வர்களான சூர்யாவும், கார்த்தியும் சினிமாத் துறையில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருகின்றனர். தனது மகனும், நடிகருமான சூர்யாவைப் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் சிவக்குமார் அவர் சினிமாவிற்கு வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், சூர்யா 1991-ம் வருடங்களில் சென்னை லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது இவரின் ஜாதகத்தையும், கார்த்தியின் ஜாகத்தையும் சிவக்குமார் பிரபல ஜோதிடர் ஒருவரிடம் தனது மகன்களின் எதிர்காலம் குறித்து கேட்டறிந்திருக்கிறார். அப்போது ஜோதிடர் சொன்னதைக் கேட்டு சிவக்குமார் ஆச்சர்யமடைந்திருக்கிறார். சூர்யாவின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் இவர் பிற்காலத்தில் உங்களைப் போன்று திரைத்துறையில் அடியெடுத்து வைப்பார். மேலும் பல விருதுகளையும் வாங்கிக் குவிப்பார். உங்களை விட அதிக, பணமும் புகழும் சேர்ப்பார் என்று கூறியிருக்கிறார்.

மேலும் எல்லாவற்றையும் விட குறிப்பாக காதல் திருமணம் தான் செய்வார் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் சிவக்குமாருக்கு இதில் சந்தேகம். ஏனெனில் 10 வயது வரை சரியாகப் பேசத் தெரியாத சூர்யா பின்னாளில் எப்படி நடிகராக வருவார் என்று யோசித்திருக்கிறார்.

குஷ்பூ பெயர் இருக்கு? என்னோட பெயர் வருமா? வைரமுத்துவிடம் பெயரைக் கேட்டு வாங்கிய ரஜினி..

ஆனால் ஜோதிடர் சொன்னது போலவே சூர்யா இயக்குநர் வஸந்த் எடுத்த நேருக்கு நேர் படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்து பின்னர் படிபடியாக முன்னனி நட்சத்திரமாக மாறினார். மேலும் மாயாவி படத்தின் போது நடிகை ஜோதிகா மீது காதல் வயப்பட்டு பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணமும் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று அந்த ஜோதிடர் சொன்னது போல் இன்று அவ்வாறே நடந்திருப்பதை சிவக்குமார் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.   தற்போது சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...