தேவையானவை:
வாழைத் தண்டு – 1
பாசிப்பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 3
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 1
சீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு – ¼ ஸ்பூன்
உளுந்து – ¼ ஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை:
1. வாழைத்தண்டில் உள்ள நாரினை நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டினை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் சேர்த்து வேகவிடவும்.
3. அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வாழைத்தண்டு, உப்பு சேர்த்து வேகவிட்டு தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவிட்ட கலவையில் ஊற்றி, கொத்தமல்லி தூவி இறக்கினால் பர்மா ஸ்டைல் வாழைத் தண்டு சூப் ரெடி.