தேவையானவை:
முருங்கைக்காய் – 5
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 1
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் – ½ ஸ்பூன்.
கடுகு- ½ ஸ்பூன்,
உளுந்து – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது.
தேங்காய்- 5 துண்டு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து முருங்கைக்காயை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து தேங்காய் மற்றும் பூண்டை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையைப் போட்டு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
4. அடுத்து முருங்கைக்காய், தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அரைத்த தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கினால் முருங்கைக்காய் கூட்டு ரெடி.