தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடல் சூடு, இத்தகைய உடல் சூட்டினை சரிசெய்யும் வகையிலான செமயான ஹேர்பேக் ஒன்றினை நாம் எப்படித் தயார் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.
தேவையானவை:
நெல்லிக்காய்- 3
வெந்தயம்- 1 ஸ்பூன்
தயிர்- கால் கப்
செய்முறை:
1. வெந்தயத்தை நீரில் போட்டு 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. அடுத்து நெல்லிக்காயினை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. அடுத்து மிக்சியில் நெல்லிக்காய், வெந்தயம் இரண்டையும் போட்டு தயிர் சேர்த்து அரைத்தால் சூப்பரான ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் தடவி 1 மணி நேரம் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வு சரியாகும்.