நோய்வாய்ப்பட்டவர்கள், உடல் நலக்குறைவு இருப்பவர்கள், மெலிந்த தேகம் கொண்டவர்கள் என அனைவரும் மட்டனில் சூப் செய்து சாப்பிட்டால் உடல் நலம் தேறுவார்கள். இப்போது மட்டனில் நாம் இப்போது சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மட்டன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – பூண்டு பேஸ்ட்– 2 ஸ்பூன்
பட்டை- 1 துண்டு,
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 /2 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
செய்முறை :
1. மட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து.தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டையினைப் போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, மட்டன் சேர்த்து 5 முதல் 6 விசில் விட்டு இறக்கவும்.
4. அடுத்து இந்த சூப்பில் கொத்தமல்லி தழை, எலுமிச்சைசாறு சேர்த்துப் பிழிந்து இறக்கினால் மட்டன் சூப் ரெடி.