சுவையான ஆற்று கெண்டை மீன் குழம்பு ரெசிப்பி!!

By Staff

Published:

cac6202d2925d716e89019599228f6b1

ஆற்று வகை  மீன்களில் கெண்டை மீன் அதிக ருசி கொண்டதாக இருக்கும். கெண்டை மீனை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர், கிராமப் புறங்களில் செய்யப்படும் மீன் வகைகளில் ஒன்றுதான் கெண்டை மீன். இப்போது கெண்டை மீன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :
கெண்டை மீன் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
வெந்தயம்- ½ ஸ்பூன்
தேங்காய்- ½ மூடி
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
தனியா தூள்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து தக்காளியை நறுக்கி கொள்ளவும். புளியை தண்ணீரில் நன்கு ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், மேலும் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
4. அடுத்து மீன் துண்டுகளைப் போட்டு  வெந்தபின்னர் தேங்காய்ப் பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கினால் கெண்டை மீன் குழம்பு ரெடி.

Leave a Comment