பாறை மீனில் கலோரிகள் குறைவாக இருப்பதாலும் மேலும் இதில் அதிக அளவு புரோட்டீன் அதிகம் இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இதனை உட்கொள்ள வேண்டும். இப்போது நாம் பாறை மீனில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பாறை மீன் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1/4 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தனியா – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 5
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
சீரகம் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் தனியா மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
3. அடுத்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
4. இந்த அரைத்த கலவையைச் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும்.
6. குழம்பு கொதித்த பின்னர், அதில் கறிவேப்பிலை தூவி இறக்கினால் பாறை மீன் குழம்பு ரெடி.