சைவப் பிரியர்கள் விரும்பிச் சாப்பிடும் வகையில் ஆவக்காயில் இப்போது பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ஆவக்காய்- 5
அரிசி – அரை கிலோ
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
இஞ்சி- 1 துண்டு
பூண்டு – 1
நெய் – 2 ஸ்பூன்
பிரியாணி இலை – 2
பட்டை- 2,
கிராம்பு- 2 ,
ஏலக்காய்-2,
ஜாதிக்காய்-2,
அன்னாசி பூ – 2
பிரியாணி மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
புதினா இலைகள் – கைப்பிடியளவு
செய்முறை:
1.ஆவக்காயினை 8 பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
2.அடுத்து குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து வதக்கவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
4. அடுத்து ஆவக்காய், புதினா இலை, பிரியாணி மசாலா போட்டு வதக்கவும்.
5. அதன்பின்னர் அரிசியைப் போட்டு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி 1 விசில் விட்டு இறக்கினால் ஆவக்காய் பிரியாணி ரெடி.