டேஸ்ட்டியான முந்திரி பிரியாணி!!

By Staff

Published:

27b52fbddb92a77b284a9a96d18e00d6

முந்திரி உடலின் கெட்ட கொழுப்பினைக் குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிப்பதாக உள்ளது. இதனைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது நாம் முந்திரியில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
முந்திரி- 20
அரிசி – அரை கிலோ
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
இஞ்சி- 1 துண்டு
பூண்டு – 1
நெய் – 2 ஸ்பூன்
பிரியாணி இலை – 2
பட்டை- 2,
கிராம்பு- 2 ,
ஏலக்காய்-2,
ஜாதிக்காய்-2,
அன்னாசி பூ – 2
பிரியாணி மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
புதினா இலைகள் – கைப்பிடியளவு

செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். அடுத்து 10 முந்திரியை தண்ணீர்விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2.அடுத்து குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து வதக்கவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
3. அடுத்து அரைத்த முந்திரி, புதினா இலை, பிரியாணி மசாலா போட்டு வதக்கவும்.
4. அதன்பின்னர் அரிசியைப் போட்டு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி, முழு முந்திரி சேர்த்து 1 விசில் விட்டு இறக்கினால் முந்திரி பிரியாணி ரெடி.

Leave a Comment