சைவப் பிரியர்கள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் வகையிலான மசாலா வடை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மசாலா வடை – 12
வெங்காயம் – 2
தக்காளி- 2
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா- 1 ஸ்பூன்
தேங்காய் – கால் மூடி
சோம்பு – 1/2 ஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
கடுகு- கால் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை நன்கு தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, மிளகு போட்டு தாளிக்கவும்.
3. அடுத்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அடுத்து மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அடுத்து அரைத்து வைத்த தேங்காய், உப்பு , தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
5. குழம்பு கொதிக்கும்போது மசாலா வடைகளைப் போட்டு, கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை துவி இறக்கினால், மசால் வடை குழம்பு ரெடி.