கோதுமை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாய் உள்ளது. இத்தகைய கோதுமையில் இப்போது நாம் ஆரோக்கியம் நிறைந்த ஒரு ரெசிப்பியை செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம்.
தேவையானவை:
கோதுமை ரவை – 100 கிராம்
பாசிப் பருப்பு – கால் டம்ளர்
தக்காளி- 1
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2. குக்கரில் கோதுமை ரவையினையும் பாசிப் பருப்பினையும் சேர்த்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில்விட்டு இறக்கவும்.
3. அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வாணலியில் போட்டு வதக்கி அத்துடன் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, கோதுமை ரவை மற்றும் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் கோதுமை ரவை கஞ்சி ரெடி.