பன்னீரில் இப்போது நாம் ஃப்ரை சிக்கன் மற்றும் மட்டனில் செய்வதைப் போல் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பன்னீர் – 200 கிராம்
இஞ்சி – ஒரு துண்டு
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத் தூள்- ½ ஸ்பூன்
கான்பிளவர் மாவு – 1 ஸ்பூன்
அரிசி மாவு- 1 ஸ்பூன்
பிரட் தூள்- கால் கப்
பூண்டு – 1/2
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. இஞ்சி மற்றும் பூண்டுடன் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து பாத்திரத்தில் பன்னீர், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கான்பிளவர் மாவு, அரிசி மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
3. அடுத்து அதில் பிரட் தூள் சேர்த்து பன்னீர் துண்டுகளைப் போட்டு எடுத்து வாணலியில் எண்ணெய்விட்டுப் போட்டு பொரித்து எடுத்தால் பன்னீர் ஃப்ரை ரெசிப்பி ரெடி.