நெல்லிக்காய் தலைமுடி கொட்டுவதைத் தடுத்து, தலைமுடி வளர்ச்சியினை ஊக்குவிக்கச் செய்கின்றது. இத்தகைய நெல்லிக்காயில் இப்போது டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
நெல்லிக்காய்- 3
கொத்தமல்லி இலை- கைப்பிடியளவு
மிளகு- 10
தேன்- 1 ஸ்பூன்
செய்முறை:
1. நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் நெல்லிக்காய், மிளகு, கொத்தமல்லி இலை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் அளவில் தண்ணீர் ஊற்றி அரைத்த பேஸ்ட்டினைப் போட்டு தேன் சேர்த்தால் நெல்லிக்காய் டீ ரெடி.