சமையல்

அனைவருக்கும் பிடித்தமான கமகமக்கும் மசாலா டீ!!

fa172b4aee3b398ed372a2fbfca34dca

மசாலா டீயினை பொதுவாக நாம் கடைகளிலேயே வாங்கிக் குடிப்பதுண்டு. ஆனால் இந்த மசாலா டீயினை வெளியே வாங்கிக் குடிக்காமல் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
தேயிலை- 3 ஸ்பூன்
சர்க்கரை- 3 ஸ்பூன்
கிராம்பு- 2
ஏலக்காய்- 2
பால்- அரை கப்
பட்டை- சிறு துண்டு

செய்முறை:
1.    பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் அளவில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
3.    அடுத்து கொதித்த நீரில் தேயிலை, பொடித்த பொடியைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.
4.    அதன்பின்னர் இதனை வடிகட்டி, இத்துடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்தால் மசாலா டீ ரெடி.

 

Avatar photo
Staff