மொறுமொறு வாழைப்பூ கோலா உருண்டை!!

By Staff

Published:

0e8cff45f4caef1bd51634c662de3a63-1

வாழைப்பூவில் நாம் மொறுமொறுப்பாக கோலா உருண்டை ரெசிப்பியினை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்தலாம்.

தேவையானவை:
வாழைப்பூ – 1
தேங்காய் – 1 மூடி
பொட்டுக்கடலை – 2 கப்
வெங்காயம் – 2
சோம்பு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
பூண்டு – 4 பல்
இஞ்சி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
1.    வெங்காயம், இஞ்சி, பூண்டினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து தேங்காயை துருவிக் கொள்ளவும். அடுத்து வாழைப்பூவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
3.    அடுத்து வாழைப்பூவுடன் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும். அடுத்து தேங்காய் சேர்த்து வதக்கி ஆறவிட்டு பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
4.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை போட்டு பொன்னிறமாக எடுத்தால் வாழைப்பூ கோலா உருண்டை ரெடி.

 

Leave a Comment