பசியுணர்வினைத் தூண்டச் செய்யும் வகையிலான ஹெர்பல் டீயினை செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
தேவையானவை:
கிராம்பு- 2
ஏலக்காய்- 2
தனியா- ½ ஸ்பூன்
மிளகு- ½ ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
சுக்குத் தூள்- 1 ஸ்பூன்
சர்க்கரை- 2 ஸ்பூன்
செய்முறை:
1. வாணலியில் தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு டம்ளர் அளவில் நீரை ஊற்றி கொதிக்கவைத்து சுக்குத் தூள், அரைத்த பொடியினைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.
3. அடுத்து இத்துடன் சர்க்கரை சேர்த்தால் ஹெர்பல் டீ ரெடி.