சுவையான வாழைப்பூ முட்டை பொரியல்!!

By Staff

Published:

475ffa3debaed35a45170dd1e648490d

வாழைப்பூ அதிக நார்ச்சத்தினைக் கொண்டதாக உள்ளதால் இதனை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது நாம் வாழைப்பூவில் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை:
வாழைப்பூ-1
முட்டை-2
சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய்- 5
சீரகத் தூள்- 2 ஸ்பூன்
கடுகு- ½ ஸ்பூன்
உளுந்து- ½ ஸ்பூன்,
மஞ்சள்தூள்- ½ ஸ்பூன்
மிளகுத்தூள்- ½ ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை:
1.    வாழைப்பூவில் உள்ள நாரை நீக்கி நறுக்கி மோரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3.    அடுத்து வெங்காயம், வாழைப்பூ, மஞ்சள் போட்டு வதக்கவும். 
4.    அடுத்து முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள், சீரகத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
5.     அடுத்து வெந்தபின்னர் கறிவேப்பிலை தூவி இறக்கினால் வாழைப்பூ முட்டை பொரியல் ரெடி.

Leave a Comment