வாழைப்பூவில் பொதுவாக ஸ்நாக்ஸ் என்றால் வடைதான் செய்வோம். இப்போது வாழைப்பூவில் டேஸ்ட்டியான கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை :
வாழைப்பூ – 1
உருளைக்கிழங்கு – 2
கடலை மாவு – கால் கப்,
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு,
கொத்தமல்லி இலை- தேவையான அளவு,
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. வாழைப்பூவின் நரம்பினை நீக்கி மோரில் ஊறவைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும். அதேபோல் உருளைக்கிழங்கையும் வேகவைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, வேகவைத்த வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கடலைமாவு, மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
4. இந்த மாவினை உருண்டைகளாகப் பிடித்து கையால் தட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி போட்டு பொரித்து எடுத்தால் வாழைப்பூ கட்லெட் ரெடி.