உடல் எடையைக் குறைக்க நினைப்போர் கருணைக்கிழங்கினை தினசரிக்கு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும், அந்த கருணைக் கிழங்கில் மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை
- கருணைக் கிழங்கு – கால் கிலோ
- புளி – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 5
- வெங்காயம் – 50 கிராம்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- பெருங்காயத்தூள்- தேவையான அளவு,
- உப்பு- தேவையான அளவு,
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – தேவையான அளவு,
- வெல்லம் – சிறிதளவு
செய்முறை:
- 1. கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும்.
- 2. அடுத்து புளியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும்.
- 3. அடுத்து பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, புளித் தண்ணீர் சேர்க்கவும்.
- 5. அடுத்து மசித்த கிழங்கைப் போட்டு வெல்லம் போட்டுக் கிளறி இறக்கினால் கருணைக் கிழங்கு மசியல் ரெடி.