சாம்பார் சாதத்திற்கு ஏற்ற உருளைக் கிழங்கு- பட்டாணி கூட்டு!!

By Staff

Published:

f34f3bac9e57cb5d41cbbc402bd2484e-1

தேவையானவை:
உருளைக் கிழங்கு-3
பட்டாணி- 1/2கப் 
வெங்காயம்- 3
தக்காளி-1
இஞ்சி- 1துண்டு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய்- 3
மஞ்சள் தூள்- 1/2ஸ்பூன்
மிளகாய் தூள்- 1ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கடுகு – 1ஸ்பூன் 
உளுந்து – 1ஸ்பூன் 
கடலை பருப்பு – 1ஸ்பூன் 
பட்டை – 1 துண்டு 
கொத்தமல்லி- தேவையான அளவு
 கறிவேப்பிலை- தேவையான அளவு

செய்முறை:
1. குக்கரில் உருளைக்கிழங்கு, பட்டாணி, தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
2.அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
3. அடுத்து அதனுடன் வெங்காயம், இஞ்சி- பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4.கடைசியாக வேகவைத்த தண்ணீர் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து கொத்தமல்லி தூவினால் உருளைக் கிழங்கு- பட்டாணி கூட்டு ரெடி.

Leave a Comment