நாம் கண்ட கண்ட செயற்கையான பானங்களைக் குடிப்பதைவிட பாரம்பரியமான தானியங்களில் செய்த பானங்களைக் குடிப்பது நல்லது, அந்தவகையில் இப்போது ராகியில் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ராகி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பவுடர் – 1/2 ஸ்பூன்
வென்னிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
பால் – 2 கப்
சர்க்கரை – 1 ஸ்பூன்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி ஆறவிடவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் கொக்கோ பவுடருடன் நீர் சேர்த்து வேகவிட்டு இறக்கி ஆறவிடவும்.
3. அடுத்து மிக்சியில் பால், சர்க்கரை அரைத்த கலவை, வென்னிலா எசன்ஸ் சேர்த்து 3 முறை அடித்து ஐஸ்கட்டி போட்டுக் கலந்தால் ராகி மில்க் ஷேக் ரெடி.