இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்து வகையான ரெசிப்பிகளுக்கும் பொருந்துகிற குருமாதான் பட்டாணிக் குருமா. இந்த சுவையான பட்டாணிக் குருமாவை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பச்சை பட்டாணி – 1 கப்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 3
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- பட்டாணியை 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
- குக்கரில் ஊற வைத்த பட்டாணியுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும்.
- அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து வேக வைத்து உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி, சோம்புத் தூள், தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
- அதன்பின்னர் கொதிக்க விட்டு இறக்கினால் பச்சை பட்டாணி குருமா ரெடி.