சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவர் ஆர். பூமிநாதனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்திய விருந்தோம்பல் உயர்கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர். பூமிநாதன் விருந்தோம்பல் (Hospitality) கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி, லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்தின்…

chennais amirta

இந்திய விருந்தோம்பல் உயர்கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர். பூமிநாதன் விருந்தோம்பல் (Hospitality) கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி, லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் அரங்கில் கவுரவிக்கப்பட்டார்.

ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்ற “தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026” (The Next Economy Forum 2026) மாநாட்டின் இரண்டாவது பதிப்பில், மாண்புமிகு லார்ட் ராமி ரேஞ்சர் (Lord Rami Ranger) மற்றும் வணக்கத்திற்குரிய மேயர் ராஜ் மிஷ்ரா (Worshipful Mayor Raj Mishra) ஆகியோர் இணைந்து இந்த அங்கீகாரத்தை வழங்கினர்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு, பொருளாதாரம், புதுமை மற்றும் கல்வியின் எதிர்காலம் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யும் முக்கிய சர்வதேச தளமாக அமைந்தது. விருந்தோம்பல் கல்வித் துறையில் புதிய பரிமாணங்களை உருவாக்கியதற்கும், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்கான திறனையும் வாய்ப்புகளையும் உருவாக்கியதற்குமான பூமிநாதனின் தொலைநோக்கு தலைமைத்துவத்தைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த அங்கீகாரத்தின் மூலம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருந்தோம்பல் கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக கவுரவிக்கப்படும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கல்வி நிறுவனமாக சென்னைஸ் அமிர்தா குழுமம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

சென்னைஸ் அமிர்தா குழுமம், இந்தியாவின் முன்னணி விருந்தோம்பல் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதுவரை 32,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்தியா மற்றும் உலகின் முன்னணி விருந்தோம்பல் நிறுவனங்களில் பணியமர்வதற்கு இந்த நிறுவனம் வழிவகுத்துள்ளது. தொழில்துறையை மையமாகக் கொண்ட கல்வி, செய்முறைப் பயிற்சி மற்றும் வலுவான வேலைவாய்ப்பு ஆதரவு ஆகியவை இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்புகளாகும்.

இந்த அங்கீகாரம் குறித்து ஆர். பூமிநாதன் கூறுகையில், “இது எனக்கு மட்டுமல்ல, சென்னைஸ் அமிர்தா குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவர், ஆசிரியர் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் கிடைத்த பெருமையாகும். விருந்தோம்பல் கல்வியில் சிறந்த தரத்தை வழங்க வேண்டும் என்ற எங்களின் உறுதியான அர்ப்பணிப்புக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக இதை கருதுகிறோம். தரமான கல்வி, உலகளாவிய அனுபவம் மற்றும் தொழில்துறைக்கேற்ற திறன்களுடன் இளைஞர்களை உருவாக்கும் எங்கள் பயணம் தொடர்ந்து முன்னேறும்,” என்றார்.

சென்னைஸ் அமிர்தா குழுமம் இதற்கு முன்பும் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஹோட்டல் மேலாண்மைக் கல்வியில் சிறப்பும் புதுமையும் ஏற்படுத்தியதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், டைம்ஸ் ஆஃப் இந்தியா வழங்கும் “ஐகான் ஆஃப் தி இயர்” (Icon of the Year) விருதை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பெற்றதுடன், மலேசியாவின் IPD – Open University Malaysia (OUM) வழங்கிய “Meritorious Award 2015” உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம், சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. உலகத் தரத்திலான விருந்தோம்பல் நிபுணர்களை உருவாக்கும் அதன் அர்ப்பணிப்பையும், இந்திய விருந்தோம்பல் கல்வியின் சர்வதேச மதிப்பையும் இது மேலும் உயர்த்தியுள்ளது.