அந்த ஒரு இடம் தான் ஷேப்பா இருக்கணும்.. மாதம் 3 லட்ச ரூபாய்க்கு பிட்னஸ் ட்ரெயினர்.. அரண்டு பார்க்க வைத்த பெண்..

Fitness Trainer for 3 Lakhs : ஒரு காலத்தில் எல்லாம் உணவு என்பது மிக ஆரோக்கியமாக இருந்து வருவதுடன் இயற்கையான உணவுகளையும் பலரும் தேடி உண்டு தங்கள் உடல் நலத்தையும் பார்த்து கொண்டனர்.…

Karol Rosalin Trainer for 3 lakhs

Fitness Trainer for 3 Lakhs : ஒரு காலத்தில் எல்லாம் உணவு என்பது மிக ஆரோக்கியமாக இருந்து வருவதுடன் இயற்கையான உணவுகளையும் பலரும் தேடி உண்டு தங்கள் உடல் நலத்தையும் பார்த்து கொண்டனர். ஆனால் தற்போது காய்கறிகள் வாங்கி வீட்டில் சமைத்து உண்டாலே அதில் ஏராளமான பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த காலத்தில் 80 வயதிலும் மிக ஆரோக்கியமாக இளம் வயதில் இருப்பவர்கள் போல துடிப்பாக செயல்பட்டு வந்த சமயத்தில் தற்போது அதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாக இருந்து வருகிறது.

உடற்பயிற்சி விழிப்புணர்வு தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் குறைவாக இருக்க, கொஞ்ச தூரம் நடந்தாலே மூச்சு வாங்க தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் சிறப்பான வகையில் உடற்பயிற்சி மேற்கொண்டால் மட்டும் தான் வயதானாலும் இளமையாக வலம் வர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு பக்கம் தங்கள் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்காகவும் பலர் ஜும்மிற்கு செல்ல இன்னும் சிலர் ஒரு பொழுதுபோக்கிற்காகவும் ஜிம்மிற்கு சென்று வருகின்றனர்.

இடுப்புக்கு மட்டும் 3 லட்சமா..

ஆனால் இதையெல்லாம் தாண்டி இளம் பெண் ஒருவர் தனது உடலில் இருக்கும் ஒரே ஒரு பாகத்திற்காக மாதம் மூன்று லட்ச ரூபாய் வரை கொடுத்து ட்ரெயினர் வைத்து கவனம் மேற்கொண்டு வருவது தான் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் தான் கரோல் ரோஸ்ஸலின் (Karol Rosalin). இவர் மாதம் இந்திய மதிப்பில் மாதம் மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து தனியாக ஒரு ட்ரெயினரை வைத்து தனது உடலில் ஒரே ஒரு பாகம் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என பயிற்சி செய்து வருகிறார்.

தனது இடுப்பு பகுதி மிக சிறந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதற்காக தனி ட்ரெயினரை நியமித்துள்ள ரோஸ்ஸலின், வாரத்திற்கு 2500 sqauts களையும் எடுத்து வருகிறார். ஒரு பக்கம் Squatsல் அதிக கவனம் செலுத்தும் ரோஸ்ஸலின் இன்னொரு புறம் நிறைய உடற்பயிற்சிகளையும் கடினமாக மேற்கொண்டு வருகிறார்.

உடலமைப்பை கொண்ட பெண்

அந்த வகையில் சமீபத்தில் ஏஐ மூலம் சிறந்த உடல் அமைப்பை கொண்ட பெண் என்ற விருதும் ரோஸ்ஸலினுக்கு கிடைத்திருந்த நிலையில் இன்னும் கடினமாக தனது இடுப்பு பகுதி சிறந்த வடிவத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக இறங்கி பயிற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதை உடற்பயிற்சி மற்றும் Squats தாண்டி தனது உணவிலும் மிகுந்த கட்டுப்பாடுடன் இருக்கும் ரோஸ்ஸலின் தேவையான உணவுகளை மட்டும் தான் உட்கொண்டு வருகிறார்.
Karol Rosalin Model

நம் ஊரில் ஒருவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்தாலே ஆறு மாதங்களுக்கும் அதிகபட்சமாக 20000 முதல் 50,000 வரை தான் செலவாகும். ஆனால் இந்த பெண் மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்து தனது இடுப்பு பகுதியை மட்டுமே மிக வளைந்த கவர்ச்சி நிறைந்த ஒன்றாக மாற்றி வருவது அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி தான் வருகிறது.