பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் vs கலைஞர் கைவினைத் திட்டம்.. மீம்ஸ் போட்டு கலாய்த்த அண்ணாமலை

சென்னை: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்காக விண்ணப்பித்த தமிழக மக்கள் 8.4 லட்சம் பேருக்குத் துரோகம் இழைத்துவிட்டு, இந்த உருமாற்றப்பட்ட திட்டத்தின் மூலம் திமுக தொண்டர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை பிணையில்லாக் கடன்களை வழங்கி,…

kalaignar kaivinai thittam vs prime minister vishwakarma yojana: Annamalai made fun of with memes

சென்னை: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்காக விண்ணப்பித்த தமிழக மக்கள் 8.4 லட்சம் பேருக்குத் துரோகம் இழைத்துவிட்டு, இந்த உருமாற்றப்பட்ட திட்டத்தின் மூலம் திமுக தொண்டர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை பிணையில்லாக் கடன்களை வழங்கி, உண்மையான பயனாளிகளுக்குப் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியங்களின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்திருக்கிறது இந்த திமுக அரசு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்கு பதில் தமிழகஅரசு கலைஞர் கைவினைத்​திட்​டம் என்ற பெயரில் அதனை மாற்றி அறிமுகம் செய்துள்ளது.. அதில் சாதி அடிப்படையில் இல்லாமல் யாரும் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்துள்ளது, தமிழக அமைச்சர் தா.மோ.அன்​பரசன் வெளியிட்டிருந்த அறிவிப்பு “கலைஞர் கைவினைத்​திட்​டம்” என்ற பெயரில் தமிழகத்​துக்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

இத்திட்​டம், குடும்பத் தொழில் அடிப்​படை​யில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்​களில் ஈடுபட்​டுள்ள அனைத்​துத் தரப்பு மக்களும் பயனடை​யும் வகையில் உருவாக்கப்​பட்​டுள்​ளது.

இத்திட்​டத்​தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்​க​வும், செய்​யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்​ய​வும் கடன் உதவி​களும், திறன்​மேம்​பாட்டு மற்றும் தொழில் முனை​வோர் மேம்​பாட்டுப் பயிற்சி​களும் வழங்​கப்​படும். கலைஞர் கைவினைத் திட்​டத்​தில் அதிகபட்​சமாக ரூ.50 ஆயிரம் வரை 25 சதவீதம் மானி​யத்​துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவி​யும், 5 சதவீதம் வரை வட்டி மானிய​மும் வழங்​கு​வதுடன், தொழில் வளர்ச்​சிக்​குத் தேவையான அனைத்து உதவி​களும் வழங்​கப்​படும். இத்திட்​டத்​தின்​கீழ் பயன்பெற குறைந்த​பட்ச வயது 35 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இத்திட்​டத்​தின்​கீழ் மர வேலைப்​பாடு​கள், படகு தயாரித்​தல், உலோக வேலைப்​பாடு​கள், பூட்டு தயாரித்​தல், சிற்ப வேலைப்​பாடு​கள், கற்சிலை வடித்​தல், கண்ணாடி வேலைப்​பாடு​கள், மண்பாண்​டங்​கள், சுடுமண் வேலைகள், கட்டிட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்​பான்கள் செய்​தல், பொம்​மைகள் தயாரித்​தல், மலர் வேலைப்​பாடு​கள், மீன் வலை தயாரித்​தல், தையல் வேலை, நகைசெய்​தல், சிகையலங்​காரம் மற்றும் அழகுக்​கலை, துணி வெளுத்தல் தேய்த்​தல், இசைக்​கருவிகள் தயாரித்​தல், துணி நெய்தல் மற்றும் துணி​களில் கலை வேலைப்​பாடுகள் செய்​தல், பாரம்​பரிய முறை​யில் ஜவுளி அச்சிடு​தல், பாசிமணி வேலைப்​பாடு​கள், மூங்​கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்​பாடு​கள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்​பாடுகள், சுதை வேலைப்​பாடு​கள், பழங்​குடி​யினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்​களுக்​குக் கடன் வழங்​கப்​படும். ஆண்டுக்​கு குறைந்​த​பட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்​பெறும் வகையில் திட்டம் செயல்​படுத்​தப்​படும்.

இத்திட்​டத்​தில் பயன்பெற ‘www.msmeonline.tn.gov.in’ என்ற இணையதளத்​தில் விண்​ணப்​பிக்க வேண்​டும். தகுதியான விண்​ணப்​பங்களை மாவட்டத் தொழில் மையத்​தின் பொது மேலா​ளர்கள் தலைமை​யில் உள்ள குழு சரிபார்த்து, வங்​கி​களுக்​குப் பரிந்​துரைக்​கும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்தாமல் குழப்பம் ஏற்படுத்தியதால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் விஸ்வகர்மா திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி வெளியிட்டுள்ளது திமுக. திமுக அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம், திமுக தொண்டர்களுக்குப் பயனளிப்பதற்காக மட்டுமே சில தகுதித் தளர்வுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்காக விண்ணப்பித்த தமிழக மக்கள் 8.4 லட்சம் பேருக்குத் துரோகம் இழைத்துவிட்டு, இந்த உருமாற்றப்பட்ட திட்டத்தின் மூலம் திமுக தொண்டர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை பிணையில்லாக் கடன்களை வழங்கி, உண்மையான பயனாளிகளுக்குப் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியங்களின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்திருக்கிறது இந்த திமுக அரசு. மக்களுக்குப் பயனளிக்காத அரசியல் அர்த்தமற்றது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.