விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம்.. தொல்.திருமா அறிக்கை..

அண்மையில் சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். மேலும்…

VCK

அண்மையில் சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். மேலும் இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய்யும் திமுக அரசினை விமர்சித்துப் பேசினார்.

இதனையடுத்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் இவ்வாறு பேசியது திமுக தரப்பில் தொல்.திருமாவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள் அறிக்கையில், 6 மாத காலத்திற்கு ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
————————————
1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது? சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு பதில்

3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி,
கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

என்று திருமாவளவன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.