BMW-ல வந்து இதையா திருடிட்டு போவீங்க.. காரில் இருந்து இறங்கி பெண் செஞ்ச வேலை.. வைரலான வீடியோ..

By Ajith V

Published:

தற்போதைய காலகட்டத்தில் எல்லாம் நம்மை சுற்றி எந்த விஷயங்கள் நடந்தாலும் அது தொடர்பான வீடியோக்கள் மிக எளிதாக வைரலாகி கவனம் பெற்று விடுகிறது. அந்த வகையில் தான் சமீபத்தில் பிஎம்டபுள்யூ காரில் வந்த பெண் ஒருவர் செய்த திருட்டும் அதற்குப் பின்னால் உள்ள சம்பவமும் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

என்னதான் பொருளாதார விஷயங்களில் நாம் முன்னேறிக் கொண்டே இருந்தாலும் அதற்கு நிகராக நிறைய இடங்களில் கொள்ளை சம்பவங்களும் நடந்து தான் வருகிறது. என்ன செய்தாலும் இவற்றையெல்லாம் தடுப்பதற்காக வழிகள் குறைவாகவே இருக்கும் நிலையில், தங்களை தற்காத்துக் கொள்ள பல இடங்களில் சிசிடிவி கேமராக்களையும் மக்கள் வைத்து வருகின்றனர்.

தங்களது வீடுகள், கடைகள், அலுவலகங்கள் என பொது இடங்கள் என எங்கே பார்த்தாலும் தற்போது சிசிடிவி கேமராக்களை மிக அதிகமாகவே பார்க்க முடிகிறது. இதன் மூலம் திருடும் நபர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே சென்றார்கள் உள்ளிட்ட விவரங்களையும் சற்று எளிதாக போலீசாரால் பின் தொடர்ந்து கொள்ள முடியும் என்பதால் ஓரளவுக்கு திருடு போன பொருட்களையும் மீட்டுவதற்கான வழிகளாக உள்ளது.

அப்படி ஒரு சூழலில் தான் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் பிஎம்டபிள்யூ காரில் வந்த பெண் ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளின் படி, பிஎம்டபுள்யூ கார் ஒன்றில் இருந்து இறங்கும் பெண் ஒருவர், பொது இடத்தில் இருக்கும் கடைக்கு அருகே செல்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அங்கே நிறைய பூச்செடி தொட்டிகள் வைக்கப்பட்டிருக்க, அதில் ஒன்றை மிக லாவகமாக எந்தவித பயமும் இல்லாமல் எடுத்து தனது காரிலும் அந்த பெண் வைக்கிறார். முதலில் சுற்றுமுற்றும் அந்த பெண் பார்க்கும் நிலையில் இவரது சம்பவத்தை அங்கிருந்த சிலர் கவனித்து விட்டதாக தெரிகிறது.

மேலும் இந்த நிகழ்வு இரவு நேரத்தில் நடந்ததாக தெரியும் நிலையில் மிக குறைவான ஆட்களே அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சிலர் அந்த பெண்ணிடம் இது தொடர்பாக விசாரித்ததாகவும் தெரியும் நிலையில், பூச்செடி தொட்டியை திருடி செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதை பற்றியும் அவர்கள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

இது தொடர்பாக அந்த பெண்ணும் ஏதோ அவர்களுக்கு விளக்கம் கொடுக்க, கடைசியில் ஒரு நபர் அந்த காருக்கு முன்னே நின்று அதனை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவரிடமும் இது பற்றி விசாரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பிஎம்டபிள்யூ கார் வாங்க சகல வசதிகள் இருந்தும் கடை வாசலில் இருக்கும் செடி தொட்டியை இப்படித்தான் எடுத்துக்கொண்டு செல்வதா என அந்த பெண்ணை பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.