பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நேற்று கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்கள் வீட்டினுள்ளே சென்றிருக்கின்றனர். இந்த சீசனுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கு காரணம் விஜய் சேதுபதி பிக் பாஸ் இன் தொகுப்பாளராக பொறுப்பேற்றது தான். ஆரம்பத்தில் சற்று திணறினாலும் இந்த சீசனை நன்றாக நடத்தி விடுவார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டார் விஜய் சேதுபதி.
இந்த முறை பிக் பாஸ் சீசன் 8-ல் அதிகப்படியாக விஜய் டிவியை சார்ந்தவர்கள் தான் உள்ளே சென்று இருக்கிறார்கள். தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, பவித்ரா, அருண்பிரசாத், தர்ஷிகா, வி ஜே விஷால், ஹன்சிகா, அருண், ஜாக்குலின் ஆகிய 11 பேர் விஜய் டிவியில் நடித்தவர்கள். மீதி 7 பேரான ரவீந்தர், சாச்சனா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், முத்துக்குமார், ஜெஃப்ரி, சௌந்தர்யா தான் வெளியிலிருந்து வந்தவர்கள்.
விஜய் டிவியில் நடித்து பிரபலமாகி தற்போது வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகளை ஒட்டுமொத்தமாக சேர்த்து பிக்பாஸ்க்குள் அனுப்பியது போல் இருந்தது. ஏற்கனவே இது போல் விஜய் டிவியை சேர்ந்தவர்கள் ஒரு ஐந்து பேருக்கு மேல் சென்ற ரியோ கேங் குரூபிஸம் ஏற்படுத்தி பிரச்சனை பண்ணினர். இந்த தடவையும் குரூபிஸம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி நிறைவடையும்போது பிக் பாஸில் இதுவரை நடந்திராத 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார். அதன்படி பிக் பாஸ் போட்டியாளர்களில் மிகவும் குறைந்த வயது போட்டியாளரான மகாராஜா திரைப்பட புகழ் சாச்சனா வெளியேறி இருப்பதாக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றது.