ஜானி மாஸ்டர் ஆட்டத்தை நிறுத்திய தெலுங்கு சினிமா நடன இயக்குநர் சங்கம்.. பாலியல் புகார் எதிரொலி..

By John A

Published:

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடன இயக்குநராகப் பணியாற்றி வருபவர் ஜானி மாஸ்டர். ஜானி பாஷா என்ற இயற்பெயர் கொண்ட ஜானி மாஸ்டரை சினிமாவில் அடையாளம் காட்டியது தெலுங்கு நடிகர் ராம் சரண். ரியாலிட்டி ஷோக்களில் தன்னுடைய திறமையை நிரூபித்தவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடன இயக்குநராக விளங்கி வருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவிலும் விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கும் நடனம் அமைத்து வருகிறார். குறிப்பாக ரவுடி பேபி,அரபிக்குத்து பாடல்கள் இவரது நடனத்தில் உருவானதே. இந்நிலையில் கடந்த மாதம் கேரள திரையுலகையே அதிரவைத்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் ஒரு புயலை அடித்து சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமா பக்கம் புதிய புயலைத் தோற்றுவித்திருக்கிறது.

எம்பிபிஎஸ் சீட் கிடைத்தும் படிக்காமல் வெளியேறினால் ரூ.10 லட்சம் அபராதம்: அதிரடி அறிவிப்பு..!

ஜானி மாஸ்டர் மீது அவருடைய குழுவில் பணியாற்றும் 21 வயது பெண் நடனக் கலைஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார். அவர் ஷுட்டிங் செல்லும் இடங்களில் தன்னிடம் அத்துமீறியதாக ராயதுர்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வழக்குப் பதிந்த ராயதுர்கம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது ஜானி மாஸ்டர் மீது தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நடன இயக்குநர்கள் சங்கத்திலிருந்து ஜானி மாஸ்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தெலுங்குப் படங்களில் பணியாற்ற தற்காலிக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகளில் ஜானி மாஸ்டருக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதே.. பாடலுக்கு சிறந்த நடனக்கலைஞர் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.