தற்போதைய காலத்தில் எல்லாம் புதிய தலைமுறை இளைஞர்கள் உருவாகும் சமயத்தில் அவர்கள் பெற்றோர்களிடம் கூட அந்த அளவுக்கு பணிவுடன் இருக்க மாட்டார்கள். தங்களுக்கான பாதையில் யாரைப் பற்றி எதுவும் சிந்திக்காமல், தங்களுக்கான லட்சியங்களும் எதுவும் இல்லாமல் வெறுமனே ஊர் சுற்றுவதை வழக்கமாக பலர் கொண்டு வலம் வரும் சூழலில், நிறைய பாதிப்பான விஷயங்களும் கூட இதில் உள்ளது.
பெற்றோர்களின் கஷ்டங்கள் எதுவும் உணராமல் வளரும் பிள்ளைகள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறுவது கூட மிக கடினமாக அமைந்து விடும். இப்படி இந்த காலத்தில் பெற்றோர்களுக்கே பலரும் மதிப்பு கொடுக்காமல் இருக்கும் சூழலில் தான் தனது பாட்டிக்காக இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் செய்த விஷயம் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.
சமீபத்தில் அனிஷ் பகத் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது பாட்டிக்காக செய்த கொடுத்த சர்ப்ரைஸ் ஒன்று பெரிய அளவில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் பின்னணி பற்றி அவர் ஆரம்பத்திலேயே தெரிவித்த தகவல் படி, அனிஷ் பகத்தின் பாட்டி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு நுரையீரல் பாதிப்பு உருவாகி உள்ளதால் வயது என்ற விஷயத்தை தாண்டி மனதளவிலும் உடைந்து போனதாக தெரிகிறது. இதனிடையே உடல்நலக் குறைவால் வீட்டில் இருந்த தனது பாட்டியிடம் அவரது கனவுகள் தொடர்பான சில விஷயங்களை கேட்டுள்ளார் அனிஷ். அதில் அவரது பாட்டியும் நிறைய விஷயங்களை கூற பள்ளி மற்றும் கல்லூரி தோழிகளை பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் இருந்துள்ளது.
தனது பாட்டியின் உடல்நிலை மோசமாகவும் இருக்கும் அதே வேளையில் இந்த நேரத்தில் அவர் நினைக்கும் விஷயங்களை செய்து கொடுக்க வேண்டும் என்ற முடிவு செய்த அனிஷ் பகத், அவரது பாட்டியின் தோழிகளையும் தேடத் தொடங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களின் ஃபோன் நம்பரையும் பெற்று பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்த அனீஸ் பகத், எதுவும் சொல்லாமல் அவரை பெங்களூருக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒரு வீட்டிற்கு தனது பாட்டியை அழைத்து செல்ல, அவரோ இது யார் வீடு என கேட்டுள்ளார். பின்னர் உள்ளே சென்று அவரது தோழியை பார்த்தும் முதலில் ஞாபகம் வரவில்லை. பின்னர் ஒரு கணம் யோசித்து விட்டு சுமார் 50 ஆண்டுகள் கழித்து தனது தோழியை பார்த்த சந்தோஷத்தில் அவரை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடிக்கவும் செய்திருந்தார் அனிஷின் பாட்டி.
மேலும் அனிஷ் பகத்தின் பாட்டியை பார்த்த அவரது தோழி, இத்தனை ஆண்டுகள் கழித்தும் நீ அழகாக இருக்கிறாய் என்றும் கூறி இருந்தார். மேலும் ஒரு சில தோழிகள் அங்கே வர, அவர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி அந்த தருணத்தை கொண்
டாடவும் செய்திருந்தனர்.
மேலும் சுமார் 50 ஆண்டுகள் முன்பு நடந்த நிறைய விஷயங்களை நினைவு கூர்ந்து எமோஷனலாகவும் அதனை பகிர்ந்து கொண்டிருந்தனர். உடல்நிலை சரியில்லாத தனது பாட்டிக்காக பேரன் கொடுத்த சர்ப்ரைஸ் பற்றி தான் தற்போது பலரும் வியப்புடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.