ஷேக்கா மஹ்ரா முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஆவார். 30 வயதான மஹ்ரா இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
மே 2023 இல், மஹ்ரா தொழிலதிபர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை மணந்தார். ஒரு வருடம் கழித்து, அவர்களுக்கு மகள் பிறந்தாள். மஹ்ரா தனது மகள் பிறந்த சில வாரங்களுக்குப் பிறகு, இன்ஸ்டாகிராம் இடுகையின் மூலம் தனது கணவரை பகிரங்கமாக விவாகரத்து செய்தார்.
இந்த ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, துபாய் இளவரசி இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தனது கணவரை விவாகரத்து செய்தார். இன்ஸ்டாகிராம் பதிவில், ஷேகா மஹ்ரா எழுதினார், “அன்புள்ள கணவரே, நீங்கள் மற்ற பெண்களுடன் பிஸியாக இருப்பதால், நம் திருமண விவாகரத்தை இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், உன்னை விவாகரத்து செய்கிறேன், உன்னை விவாகரத்து செய்கிறேன், உங்கள் முன்னாள் மனைவி” என்று பதிவிட்டு வைரலானார். இந்நிலையில் விவாகரத்து முடிந்து 2 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளார்.
அதற்கு காரணம் ஷேக்கா மஹ்ரா தனது சொந்த வாசனை திரவிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்டின் பெயரே விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெளியீட்டிற்கு முன், இளவரசி தனது பிராண்டான மஹ்ரா எம் 1 இன் நறுமணத்தின் டீசரை திங்களன்று இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து கொண்டார், இது வைரலானது.
பின்னர் இளவரசி ஷேகா மஹ்ரா அறிமுகப்படுத்தப்பட்ட வாசனை திரவியத்திற்கு Divorce என்று பெயரிட்டு உள்ளார். சமூக ஊடகங்களில் வைரலான இந்த வாசனை திரவியத்தின் டீஸர் உடைந்த கண்ணாடி, கருப்பு இதழ்கள் மற்றும் கருப்பு சிறுத்தை போன்ற காட்சிகளைக் கொண்டிருந்தது. தன் பிரிந்த கணவரை வெறுப்பேத்த இளவரசி இந்த மாதிரி செய்கிறாரா என்று இணையவாசிகள் பேசி வருகின்றனர்.