Video : பைக் பிறந்தநாளை கொண்டாடிய நபர்.. அதுலயும் அந்த கேக் கட்டிங் தான் ஹைலைட்டே ..

Published:

முன்பெல்லாம் சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்களின் பயன்பாடு அதிகமாக இல்லாத காரணத்தினால் செய்தித்தாள்களில் வரும் செய்திகள் பற்றி தான் மக்கள் பொது இடங்களில் கூடி இருந்து பலரும் உரையாடுவார்கள். இப்போது எந்த அளவுக்கு வதந்திகள் இருக்கிறதோ அதேபோல அந்த காலத்திலும் பலர் கூடி தங்களுக்கு அறியும் செய்திகளை பற்றி ஏதாவது உரையாடி கொண்டே இருப்பார்கள்.

இந்த பழக்கம் மெல்ல மெல்ல மாற, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு இஷ்டமான கருத்துக்களை பற்றி பேசி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது செய்திகளை விட வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் தொடர்பான விஷயங்கள் தான் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

பலரும் படித்து செய்திகளை தெரிந்து கொள்வதை விட அது தொடர்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கண்டு அதனை பற்றி அறிந்து கொள்ளவும் விரும்புகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் எக்கச்சக்கமான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களை அதிகமாக ஆக்கிரமித்து வைரலாகியும் வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பைக் பிரியர் செய்த விஷயம் தான் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. இங்கே பல வாகன ஓட்டிகளுக்கும் பைக் அல்லது கார் என ஏதாவது ஒன்றின் மீது மிகப் பிரியமாக இருப்பார்கள். அப்படி இருக்கும் நபர்கள் தங்களிடம் இருக்கும் பைக்கையோ அல்லது காரையோ ஏதோ குடும்ப உறுப்பினர் போல மிக கவனமாக பராமரித்து வருவார்கள்.

சிலர் தங்களின் பைக்கில் கை வைத்தாலே பிடிக்காத அளவுக்கு அவர்கள் ரியாக்ட் செய்யும் நிலையில் இப்படியும் ஒரு பைக் பிரியர் இருக்க முடியுமா என்ற அளவுக்கான ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பகிரப்பட்டு வரும் வீடியோவின் படி, அந்த பைக்கின் பிறந்த நாளை அதன் உரிமையாளர் கொண்டாடியுள்ளதாக தெரிகிறது.

பொதுவாக மனிதர்கள் பிறந்த நாள் என வரும்போது கேக் வெட்டி கொண்டாடுவார்கள். அதேபோல இந்த நபரும் சற்று வித்தியாசமாக தனது பைக்கின் முன் சக்கரத்தில் ஒரு கத்தியை ஒட்டி வைத்து அதனை முன்னும் பின்னுமாக உருட்டி முன்னே கேக் வைத்து வெட்டுவது போல உருவாக்கியுள்ளார்.

பார்ப்பதற்கு அந்த பைக் முன்னும் பின்னுமாக திரும்பி அதுவே கேக் வெட்டுவது போன்று இருக்கும் நிலையில் இப்படி எல்லாம் ஒருவர் யோசிக்க முடியுமா என இணையவாசிகள் வியந்து போய் பார்த்து வருகின்றனர். ஒரு பக்கம் இது பலரையும் வியக்க வைத்திருந்தாலும் இன்னொரு பக்கம் பலரும் இதனை ஒரு மீம் வீடியோவாகவும் குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...