திருமணத்தின்போதும், யாரையாவது வாழ்த்தும்போதும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று கூறி வாழ்த்துவதை பார்த்திருக்கோம். பதினாறுன்னா பிள்ளைகளா?! போதுமா?!ன்னு கிண்டலா சொல்வோம். ஆனா, பிள்ளைச்செல்வத்தோடுக்கூடிய 16 செல்வங்கள் ஒரு மனிதனின் வாழ்வுக்கு முக்கியமானது. அவை எவைன்னு தெரிஞ்சுக்கலாமா?!
- கலையாத கல்வி
- கள்ளமில்லா நட்பு குறையாத வயது
- குன்றாத வளமை
- மறையாத இளமை
- பரவசமான பக்தி
- பிணியற்ற உடல்
- சலியாத மனம்
- அன்பான துணை
- தவறாத சந்தானம்
- தாழாத கீர்த்தி
- மாறாத வார்த்தை
- தடையற்ற கொடை
- தொலையாத நிதி
- கோணாத செயல்
- துன்பமில்லா வாழ்வு எனச்சொல்லப்படும் 16 பேறுகள்தான் பெரியவர்களின் வாழ்த்தில் இடம்பெறுவதாகும்..