கோட்டை முதல் குமரி வரை.. சினேகன் பாடல் வரிகள்.. விஜயகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

Snehan: 1979 ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் விஜயகாந்த். அது முதல் பல படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். அதோடு மக்களால் நடிகராக மட்டுமல்லாமல் பல உதவிகளை வாரி வழங்கிய தெய்வமாகவும் பார்க்கப்படுகிறார்.

அஜித்தின் உடல்நிலை.. கண்ணீர் சிந்திய விஜயகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா..?

இவரது நடிப்பில் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் ராஜ்ஜியம். இயக்குனர் மனோஜ் குமார் இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்த், திலீப், சமிதா ஷெட்டி, பொன்னம்பலம், முரளி, ஜனகராஜ், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெற்றி படமாக அமையவில்லை என்றாலும் இதில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் விஜயகாந்திற்கு மிகவும் பிடித்த பாடல் ஆக அமைந்திருந்தது. இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எட்டு பாடலுக்குமே வரிகள் எழுதியது கவிஞர் சினேகன் தான்.

இப்படி ஒரு மனிதரா..? பட்டினியில் வாடிய பிரபலங்கள்.. ரயிலை நிறுத்தி விஜயகாந்த் செய்த செயல்..!!

இந்நிலையில் படத்தில் ஒரு பாடல் குறித்து சினேகன் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். அப்போது கூறிய அவர், படத்தில் ஒரு பாடலை தவிர்த்து மற்ற பாடல்களை அனைத்தையும் தன்னை எழுத வைத்த இயக்குனர் மனோஜ் குமார் ஒரு பாடலை மட்டும் கவிஞர் வாலி எழுதுவார் என்று கூறிவிட்டாராம்.

வாலி எழுதுவார் என்று கூறியிருந்த முதல் பாடல் மட்டும் தயாராகாமல் இருந்துள்ளது. உடனே விஜயகாந்த் அனைத்து பாட்டையும் சினேகனிடம் தானே கொடுத்தீர்கள் ஒரு பாட்டை மட்டும் எதற்காக வாலியிடம் கொடுத்தீர்கள் என்று கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சினேகன் உடனடியாக ஹைதராபாத் வரவழைக்கப்பட்டுள்ளார்.

சாப்பாடு கேட்டாலே இதான் நிலைமை.. விஜயகாந்த் சந்திச்ச அவமானங்கள்.. சினிமாவில் ஜெயிச்சு ஊரெல்லாம் சாப்பாடு போட்ட தங்க மனசு..

அதன் பிறகு சினேகனே அந்த பாடலையும் எழுதியுள்ளார். அதுதான் “கோட்டை முதல் குமரி வரை கட்டு ஒரு மாலை. ஏழைகளின் தோழன் என்று போடு அவன் மேல” என்ற பாடல். இந்த பாடலைக் கேட்ட விஜயகாந்த் எனது ஆயுட்காலம் வரை இந்த வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கும் என்று கூறியதாக சினேகன் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews