108 திவ்ய தேசங்கள் எவைன்னு தெரியுமா?!

By Staff

Published:

19298180cd904fbbecf41e98c0ee4037

விஷ்ணுவினையும் அவரது பராக்கிரமத்தையும் போற்றி 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப் போற்றபடுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளத்திலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.

e9d14e895be33c00a3a6f7c2040cc99c

திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

சோழநாட்டு திருப்பதிகள் – 40

தொண்டைநாட்டு திருப்பதிகள் – 22

நடுநாட்டு திருப்பதிகள் – 2

நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் – 2

பாண்டியநாட்டுத் திருப்பதிகள் – 18

மலைநாட்டுத் திருப்பதிகள் – 13

வடநாட்டு திருப்பதிகள் – 11 இவற்றில்

84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும்,

11 திருத்தலங்கள் கேரளாவிலும்

2 திருத்தலங்க ஆந்திராவிலும்,

4 திருத்தலங்கள் உத்திரப்பிரதேசத்திலும்,

3 திருத்தலங்கள் உத்திரகாண்டிலிம்,

1 திருத்தலம் குஜராத்திலும்,

1 திருத்தலம் நேபாலத்திலும்

மிச்சம் இரண்டு திருத்தலங்கள் வைகுண்டம் எனப்படும் மேலோகத்திலும் இருப்பதாய் நம்பிக்கை,

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்கள் எவைன்னு தெரிந்துக்கொள்ளலாமா?!

108 திவ்ய தேசங்களானது 12 ஆழ்வார்களால் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பாடப்பெற்ற சிறப்புமிக்க விஷ்ணுவின் திருத்தலங்கள் ஆகும். அவற்றை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்

1,திருவரங்கம், திருச்சி (பூலோக வைகுண்டம்)

2,திருக்கோழி, திருஉறையூர் (உறையூர் பகுதி), திருச்சி

3,திருத்தஞ்சை மாமணிக் கோயில், தஞ்சாவூர்

4,அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள், திருச்சி

5,உத்தமர் கோயில், திருச்சி

6,திருவெள்ளறை, திருச்சி

7,புள்ளபூதங்குடி, கும்பகோணம்

8,கோயிலடி, திருச்சி

9,ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில், கும்பகோணம்

10,தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில், குத்தாலம்

11,சிறு புலியூர், சீர்காழி

12,திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், கும்பகோணம்

13,தலைச்சங்காடு, சீர்காழி

14,கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில், கும்பகோணம்

15,கண்டியூர், தஞ்சாவூர்

16,ஒப்பிலியப்பன், கும்பகோணம்

17,திருக்கண்ணபுரம், சீர்காழி

18,திருவாலி, திருநகரி, சீர்காழி

19,நாகப்பட்டினம் (திருநாகை)

20,நாச்சியார்கோயில், கும்பகோணம்

21,நாதன் கோயில், கும்பகோணம்

22,திருஇந்தளூர், மாயவரம்

23,திருச்சித்ரகூடம், சிதம்பரம், சீர்காழி

24,திருக்காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி

25,திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை), கும்பகோணம்

26,திருக்கண்ணங்குடி, சீர்காழி

27,திருக்கண்ணமங்கை, கும்பகோணம்

28,கபிஸ்தலம், கும்பகோணம்

29,திருவெள்ளியங்குடி, கும்பகோணம்

30,திருமணிமாடக் கோயில், சீர்காழி

31,வைகுந்த விண்ணகரம், சீர்காழி

32,அரிமேய விண்ணகரம், சீர்காழி

33,திருத்தேவனார்த் தொகை, சீர்காழி

34,வண்புருடோத்தமம், சீர்காழி

35,செம்பொன் செய்கோயில், சீர்காழி

36,திருத்தெற்றியம்பலம், சீர்காழி

37,திருமணிக்கூடம், சீர்காழி

38,திருக்காவளம்பாடி, சீர்காழி

39,திருவெள்ளக்குளம், சீர்காழி

40,திருப்பார்த்தன் பள்ளி, சீர்காழி

41,திருமாலிருஞ்சோலை, மதுரை

42,திருக்கோஷ்டியூர், திருகோஷ்டியூர்

43,திருமெய்யம், புதுக்கோட்டை

44,திருப்புல்லாணி, இராமநாதபுரம்

45,திருத்தண்கால், மதுரை

46,திருமோகூர், மதுரை

47,கூடல் அழகர் கோயில், மதுரை

48,ஆண்டாள் திருக்கோவில், திருவில்லிபுத்தூர்

49,ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர், (நவதிருப்பதி) திருநெல்வேலி

50,திருத்துலைவில்லி, மங்கலம் இரட்டைத் திருப்பதி (நவதிருப்பதி) திருநெல்வேலி

51,வானமாமலை, திருநெல்வேலி

52,திருப்புளிங்குடி, (நவதிருப்பதி) திருநெல்வேலி

53,திருப்பேரை, (நவதிருப்பதி) திருநெல்வேலி

54,ஸ்ரீவைகுண்டம், (நவதிருப்பதி) திருநெல்வேலி

55,திருவரகுணமங்கை (நத்தம்), (நவதிருப்பதி) திருநெல்வேலி

56,திருக்குளந்தை, (நவதிருப்பதி) திருநெல்வேலி

57,திருக்குறுங்குடி திருநெல்வேலி

58,திருக்கோளூர், (நவதிருப்பதி) திருநெல்வேலி

59,பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம், கேரளா

60,திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்), கன்னியாகுமரி

61,திருக்காட்கரை, கேரளம்-கோட்டயம்

62,திருமூழிக்களம், கேரளம் -கோட்டயம்

63,திருப்புலியூர், கேரளம் – கோட்டயம்

64,திருச்செங்குன்றூர், கேரளம் – கோட்டயம்

65,திருநாவாய், கேரளம் – திருச்சூர்

66,திருவல்லவாழ், கேரளம் – கோட்டயம்

67,திருவண்வண்டூர், கேரளம் – கோட்டயம்

68,ஆதிகேசவ பெருமாள், திருவட்டாறு, கன்னியாகுமரி

69,திருவித்துவக்கோடு, கேரளம்-திருச்சூர்

70,திருக்கடித்தானம், கேரளம் – கோட்டயம்

71,திருவாறன்விளை, கேரளம் – கோட்டயம்

72,திருவயிந்திபுரம், கடலூர்

73,திருக்கோவலுர், கடலூர்

74,திருக்கச்சி, காஞ்சிபுரம்

75,அட்டபுயக்கரம், காஞ்சிபுரம்

76,திருத்தண்கா(தூப்புல்), காஞ்சிபுரம்

77,திருவேளுக்கை, காஞ்சிபுரம்

78,திருப்பாடகம்கா, காஞ்சிபுரம்

79,திருநீரகம், காஞ்சிபுரம்

80,நிலாத்திங்கள், காஞ்சிபுரம்

81,திரு ஊரகம், காஞ்சிபுரம்

82,திருவெக்கா, காஞ்சிபுரம்

83,திருக்காரகம், காஞ்சிபுரம்

84,திருக்கார்வானம், காஞ்சிபுரம்

85,திருக்கள்வனூர், காஞ்சிபுரம்

86,திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்

87,திருப்பரமேச்சுர விண்ணகரம், காஞ்சிபுரம்

88,திருப்புட்குழி, காஞ்சிபுரம்

89,திருநின்றவூர், சென்னை

90,திரு எவ்வுள், சென்னை

91,திருநீர்மலை, சென்னை

92,திருவிடவெந்தை, சென்னை

93,திருக்கடல்மல்லை, சென்னை

94,திருவல்லிக்கேணி, சென்னை

95,திருக்கடிகை (சோளிங்கர்), சென்னை

96,திருவேங்கடம், ஆந்திரம்

97,அகோபிலம் (சிங்கவேள்குன்றம்), ஆந்திரம்

98,திருவயோத்தி, உத்தரப் பிரதேசம்

99,நைமிசாரண்யம், உத்தரப் பிரதேசம்

100,முக்திநாத், நேபாளம்

101,பத்ரிகாச்ரமம், உத்தராகண்ட்

102,தேவப்ரயாகை, உத்தராகண்ட்

103,திருப்பிரிதி, உத்தராகண்ட்

104,திருத்துவாரகை, குஜராத்

105,வடமதுரை, டெல்லி

106,ஆயர்பாடி, டெல்லி

107,திருப்பாற்கடல் (புவியில் இல்லை)

108,பரமபதம் நாதன் திருவடி

Leave a Comment