ஹோட்டல் ஸ்டைல் வெஜ் புலாவ் வீட்டிலே செய்வது எப்படி…?

By Velmurugan

Published:

சைவ பிரியர்கள் பிடித்தமான சுவை மிகுந்த வெஜ் புலாவ் வீட்டிலே செய்வது செய்முறை இதோ!

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி – 1 கப்

பட்டாணி – 50 கிராம்

காலிபிளவர் – 50 கிராம்

கேரட் – 50 கிராம்

பீன்ஸ் – 50 கிராம்

பச்சை மிளகாய் – 3

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்புன்

பட்டை – சிறிதளவு

கிராம்பு – 2

தேங்காய் பால் – 1 கப்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவைக்கு ஏற்ப

தாளிக்க எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

நெய் – 2 தேவைக்கு ஏற்ப

இதயத்தை பலப்படுத்த உதவும் அக்ரூட் பருப்பு !!

செய்முறை:

பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்

காலிபிளவர், கேரட், பீன்ஸ், தக்காளி எல்லாவற்றையும் ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த காலிபிளவர், கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தேங்காய் பால், 2 கப் தண்ணீர், மற்றும் உப்பு, சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து மூடிக்கொள்ளவும்.

நீராவி வந்ததும் குக்கரில் வெயிட் போட்டு 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும் சுவையான வெஜ் புலாவ் இதோ தயார்.

Leave a Comment