7 நாளில்ல லட்டருக்கு என்ன பதில்ன்னு சொல்றேன்: ஷெரினிடம் தர்ஷன்

053fefb2acbcd2f47f91975caa44e6f6

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று தர்ஷன் வீட்டை விட்டு வெளியேறி கமல் முன்னிலையில் தோன்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டவுடன் ஒவ்வொருவருக்கும் ஆறுதல் கூறினார்.

அப்போது ஷெரினிடம் ‘உன்னுடைய லட்டருக்கு இன்னும் 7 நாளில் பதில் சொல்றேன்’ என்று கூறி ஆனால் அந்த பதில் அல்ல என்றும் கூறி ஒரு வெள்ளேந்தி சிரிப்பை சிரித்தார். இதனால் அழுதுகொண்டிருந்த ஷெரினும் சிரித்துவிட்டார்.

மேலும் சாண்டியிடம் இந்த பிக்பாஸ் வீடு இத்தனை நாள் கலகலப்பாக இருந்தது என்றால் அதற்கு காரணம் நீங்கள் ஒருவர்தான் என்று கூறிவிட்ட்டு அதன்பின் முகினிடம் ‘உன்னில் நான் என்னை பார்க்கின்றேன். நீ ஜெயிச்சா உன்னைவிட நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்றார்.

பின் லாஸ்லியாவிடம் ‘உன்மேல் மக்கள் ரொம்ப நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது உனக்கு தெரியவில்லை. அதனால் தான் நீ ஃபைனலுக்கு வந்துள்ளாய். வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...