முதல் அமாவாசையில் விரதம் இருந்தாச்சு… 2வது அமாவாசையும் இருக்கலாமா…?!

இந்த ஆண்டு ஆடிமாதத்தில் 2 அமாவாசைகள் வந்து விட்டன. அதாவது ஆடி 1ம் தேதியில் ஒரு அமாவாசை. இன்று (16.8.2023)  2ம் அமாவாசை. சிலருக்கு ஒரு சந்தேகம் வருகிறது.

அதான் ஆடி முதல் தேதி (17.7.2023) அமாவாசையில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்தாச்சு. அடுத்து  இன்று (16.8.2023) 2வது அமாவசைக்கு விரதம் இருக்கணுமான்னு கேட்குறாங்க. அவங்களுக்கான பதில் தான் இந்த கட்டுரை. வாங்க பார்க்கலாம்.

Amavasai
Amavasai

ஆடி முதல் அமாவாசையை பலரும் சூனிய அமாவாசைன்னு சொல்றாங்க. 2வது அமாவாசை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆனால் பித்ரு வழிபாட்டுக்கு இப்படி கணக்குப் பார்க்கத் தேவையில்லை. இது ஒரு எளிமையான வழிபாடு. அதனால் தர்ப்பணம் கொடுக்க தவறிவிடாதீர்கள்.

காலை நேரத்தில் தான் அமாவாசைக்கான வழிபாட்டை செய்ய வேண்டும். அதுவும் சூரியன் உதயத்திற்குப் பிறகு தான் செய்யணும். வீடு, கோவில், நதிக்கரை என எங்கு வேணாலும் செய்யலாம். எள்ளும், தண்ணீரும் இறைத்து காசி காசி காசின்னு சொல்லி விட வேண்டும். அந்தத் தண்ணீரைக் கால் படாத இடத்திலும், சிங்கிலும் ஊற்றிவிடலாம். சூரியபகவானுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்.

அமாவாசை அன்று கோலம் போடக்கூடாது. கண்டிப்பாக இலை போட்டு படையல் வைக்க வேண்டும். முன்னோர்களுக்கு என்னென்ன பிடிக்குமோ அதை செய்து வைத்து வழிபட்டு விட்டு தான் நாம் சாப்பிட வேண்டும்.

அப்பாவோ, அம்மாவோ இல்லாதவர்கள் இந்த வழிபாட்டைக் கட்டாயம் செய்ய வேண்டும். மாமனார், மாமியாருக்காக அன்னதானம் செய்யலாம். இலை போட்டு படையல் போடலாம். ஆனால் விரதம் இருக்கக்கூடாது. கணவர் தான் இருக்க வேண்டும்.

இறந்த முன்னோரது படத்தை வைத்து படையல் போட்டு விரதம் இருக்கலாம். காக்கைக்கு சாப்பாடு வைத்து விட்டு தான் நாம் சாப்பி வேண்டும். கணவர் தர்ப்பணம் செய்யும் போது மனைவி அருகில் இருப்பது மிகவும் நல்லது. சிறப்பானது. அதைத் தான் நம் முன்னோர்களும் விரும்புவர்.

Aadi Amavasa
Aadi Amavasa

இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு தான் அமாவாசை விரதம் இருக்கணுமான்னு சந்தேகம் வேண்டாம். முதல் மாத அமாவாசையிலேயே நீங்கள் விரதம் இருக்கலாம். அடுத்து அன்னதானம். மாலை நெய்தீபம். இவை அமாவாசை அன்று ரொம்ப ரொம்ப அவசியம். எல்லா அமாவாசைகளிலும் இப்படி செய்வது கூடுதல் சிறப்பு.

அதனால் இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசைகளிலும் நீங்கள் செய்வதில் தவறேதுமில்லை. அது உங்களுக்கு கூடுதல் சிறப்பு தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...