அண்ணாமலைக்கு 27 வயது

ரஜினிகாந்த் நடித்து கவிதாலயா தயாரிப்பில் சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவான படம் அண்ணாமலை. முதல் முதலாக தேவா இப்படத்துக்காக ரஜினிகாந்துக்கு உருவாக்கிய டைட்டில் இசை இன்றும் பல ரஜினி படங்களுக்கு டைட்டிலில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு ஒரு மாஸ் ஆன இசை அது.


தன் வீட்டை அபகரிக்கும் உயிர் நண்பனிடமும் அவனின் தந்தையிடமும் ரஜினிகாந்த் சவால் விட்டு முன்னேறுவதுதான் கதை. ரஜினிகாந்த் சவால் விடும் காட்சி இந்த படத்தில் பலம் வாய்ந்த காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ என்று சவால் விட்டு தொடை தட்டி பேசிய வசனம் உலகப்புகழ்பெற்ற வசனமாக விளங்கியது.

மற்றும் படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் ஆக அமைந்தன.

ஓப்பனிங் சாங் ஆக வந்தேண்டா பால்காரன் பாடல் வந்தது. இன்று வரை அப்பாடல் தெறி மாஸ்.

ரஜினியின் வெற்றி நிச்சயம் பாடல் மிகச்சிறந்த மாஸ் பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இடம்பெற்ற கடவுளே கடவுளே காமெடி காட்சி அந்த நேரத்தில் வெகுவாக பேசப்பட்டது.

மனோரமா,சரத்பாபு, ராதாரவி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், குஷ்பு என அனைவரின் பாத்திர படைப்பும் அருமையாக இருந்தது இப்படத்தில்.

இன்றோடு இப்படம் ரிலீஸ் ஆகி 27 வருடம் ஆகிறது.

Published by
Staff

Recent Posts