இளையராஜாவின் ஹிட் அடித்த அந்நியமொழி பாடல்கள் -பாகம் 15

இளையராஜாவின் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்களில் பெரும்பாலும் தெலுங்கு படங்களும், சிரஞ்சீவி நடித்த படங்களாகவும் பார்த்திருப்பீர்கள் இன்னும் சிரஞ்சீவியின் படங்கள் பாடல்கள் வர இருக்கிறது இன்று வெங்கடேஷ் நடித்த ஒரு தெலுங்கு படம் மாறுதலுக்காக பார்ப்போம் .

b564b31de757bfabfb36c8d4fcd0f856-2

வெங்கடேஷ், தபு நடிப்பில் கடந்த 1991ல் கூலி நம்பர் 1 திரைப்படம் வந்தது. ராகவேந்திர ராவ் இயக்கிய இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

மோகன் நடித்த தென்றலே என்னை தொடு படத்தில் புதிய பூவிது பாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த பாடலின் சாயலில் ஒரு பாடலை இதில் இளையராஜா போட்டிருந்தார். ராகவேந்திர ராவ் இளையராஜா கூட்டணியில் வந்த படத்தின் பாடல்கள் எல்லாமே சூபர் ஹிட்தான் அதில் மாற்றமே இல்லை என்பதை இப்படத்தின் பாடல்களும் நிரூபித்தன.

கொத்த கொத்தகா என ஆரம்பிக்கும் இந்த பாடல் புதிய பூவிது பூத்தது என்ற பாடலை தழுவி வந்த அதே மெட்டில் அமைந்த பாடலாகும்.

கலையா நிஜமா என்ற பாடலை இளையராஜாவும், பி சுசீலாவும் இணைந்து பாடி இருந்தனர். மிக இனிமையான பாடலாக இது இருந்தது. இந்த படமும் இளையராஜாவின் மியூசிக்கல் ஹிட் படமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...