பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விண்ணப்பத் தாள்களின் நகல்களைப் பெற விண்ணப்பிப்பது எப்போது?

பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி மே மாதம் வெளியானது.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை 9,38,271 மாணவர்கள் எழுதினர் அதில் 8,35,614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை 7,76,844 மாணவர்கள் எழுதினர். அதில் 7,064,13 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாள்களின் நகல்களை பெறவோ அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவோ விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதற்கான விண்ணப்ப தேதி நேற்று தொடங்கியுள்ளது. விடைத்தாள்களின் நகல்களைப் பெற அல்லது மறு கூட்டல் செய்ய நினைக்கும் மாணவர்கள் 24.5.2023 ஆம் தேதி முதல் 27.5.2023 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறு கூட்டல் அல்லது விண்ணப்பத்தாள்களின் நகல்களைப் பெற நினைக்கும் மாணவர்கள் தங்களின் பள்ளி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Published by
Sowmiya

Recent Posts