10 முன்னணி நடிகைகள் நடித்து சாதனை படைத்த படம்

தெலுங்கில் என் டி ஆர் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது அனைவருக்கும் தெரிந்த விசயமே. இப்படத்தை க்ரிஷ் இயக்கியுள்ளார்.


ஆந்திர அரசியலையே கட்டுக்குள் வைத்திருந்த ஆந்திர மக்களின் பேரன்பை பெற்ற என்.டி ராமாராவின் வாழ்க்கை சரித்திரமே இப்படமாகும்.

என்.டி ஆர் ஆக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்க சந்திரபாபு நாடுடு பாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்கிறார்.

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க எந்த திரைப்படத்திலும் இல்லாத அளவு ரகுல் ப்ரீத் சிங், நித்யா மேனன்,ஹன்சிகா, ஷாலினி பாண்டே,பாயல் ராஜ்புத், பூனம் பஜ்வாம் ப்ரணிதா, மஞ்சிமா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் அனைவரும் முக்கிய வேடங்களில் படத்தில் நடித்துள்ளதன் மூலம் 10க்கும் மேற்பட்ட ஒரு நடிகைகளின் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Published by
Staff

Recent Posts