நச்சுன்னு 10 வீட்டுக்குறிப்புகள்

3f1bc9e5a081135eee7e589318f5eeda

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். எதும் பழக பழக கைவரும். அதுமாதிரிதான் சமையலும்… என்னதான் அக்கம்பக்கம் கேட்டு, யூட்யூப் பார்த்து, புத்தகத்தில் படிச்சு செஞ்சாலும் சில தடவை சொதப்பினப்பின் தான் சுவையா சமைக்க வரும். ஆனா, வீட்டை சுத்தமா அழகா வச்சிருக்க அப்படி முடியாது. அடுத்தவங்க அனுபவம்தான் நமக்கு கைக்கொடுக்கும். அதுமாதிரியான வீட்டுக்குறிப்புகள் சிலவற்றை தொடராய் பார்க்கலாம்..

1.பாலை சிம்மில் வைத்துவிட்டு வேறுவேலையை கவனிச்சுட்டு வந்து பார்த்தால் பால் பொங்கி வழிஞ்சிருக்கும். அப்படி பால் பொங்கி வழியாம இருக்க ஒரு வழி இருக்கு. பால் பாத்திரத்தின்மீது ஒரு கரண்டியை குறுக்கால வச்சுட்டா பால் பொங்கி வழியாது..

2.ஃப்ளாஸ்க்கைத் திறக்கும்பொழுது ஒருமாதிரி வாசனை வரும். அந்த வாசனையை வெறும் தண்ணி ஊத்தி கழுவினாலும் போகாது. அதனால், பிளாஸ்க்கை பயன்படுத்தி கழுவி காய வச்சு எடுத்து வைக்கும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு மூடி வையுங்கள். வாசனை வராது.

3. முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் வேக வைக்கும்பொழுது சீக்கிரத்துல நிறம் மாறிடும். அதுமாதிரி மாறாம இருக்க, ஒரு துண்டு எலுமிச்சை சேர்த்து வேக வைத்தால் நிறமும் மாறாது, சுவையும் கூடும்.

4. பூரி மசாலா, சமோசா, வடை, காய்கறிக் குருமாலாம் செய்யும்போது வெங்காயம் போதாமல் போய்விட்டதா?! கவலை வேண்டாம்! வெங்காயத்தோடு முட்டைக்கோசையும், கலந்து போட்டால் வித்தியாசம் தெரியாது.

4. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து வைத்துக் கொண்டு, காலில் தடவினால் வெடிப்புகள் மறைந்து மென்மையாகும்.

5. துளசி கொதிக்க வைத்த நீரில் சுக்கு தட்டிப் போட்டு, தேன் கலந்து, காலை நேரத்தில், வெறும் வயிற்றில் பருகி வந்தால் மலச்சிக்கல் நீங்கி, இரத்த ஓட்டம் சீரடைந்து தேகம் ஆரோக்கியமாகவும், வனப்பாகவும் இருக்கும்.

6. கார வகைகள் செய்யும்போது வெண்ணெய்யும், இனிப்பு வகைகளுக்குச் சுத்தமான நெய்யும் சேர்த்துச் செய்தால் சுவையாக இருப்பதோடு, அதிக நாள் கெடாமலும் இருக்கும். கார வகைகளுக்கு மாவு பிசையும்பொழுது ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்துப் பிசைந்தால் தேங்காய் எண்ணெய்யில் செய்தவை போலச் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

8. கோதுமை மாவைக் கரைத்து பஜ்ஜி பொரித்தால் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.

9. தனியாவையும், தேங்காயையும் சிறிது வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொணடு தேவையானபொழுது சாம்பாரில் போட, சாம்பார் மணக்கும்.

10. புடலங்காய் விதைகளை நன்றாக வெயிலில் வைத்து விட்டு, சிறிது எண்ணெய்யில் உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சில மிளகாய்கள் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, இத்துடன் கொஞ்சம் உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடி செய்து, சுடு சாதத்துடன் நெய் கலந்து உண்ண பருப்புப் பொடி, பூண்டுப் பொடி போலச் சுவையாக இருக்கும்.

வீட்டுக்குறிப்புகள் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews