நல்லவனுக்கு நல்லவன்; கெட்ட பய சார் சம்பத்… புவனா ஒரு கேள்விக்குறி!

ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குநர் கே. பாலசந்தராக இருந்தாலும், அவரை தமிழ் சினிமாவின் வசூல் ராஜாவாகவும் முழுமையான கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியவர் எஸ்.பி. முத்துராமன் தான். அன்றைய காலகட்டத்தில் மக்களை ரசிக்க வைக்கும் வகையில் பக்கா கமர்ஷியல் கதைகள் மூலம் ரஜினியை படத்துக்கு படம் மாறுபடுத்தி காட்டி ரசிகர்களுக்கு விருந்து அளித்தவர் எஸ்.பி. முத்துராமன்.

ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினிகாந்த் நடித்தபோது இந்த படத்தை மக்கள் ரசிப்பார்களா? என்ற கேள்வி ஒரு பார்வையாளனாக ரஜினிகாந்த் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டதாக கதைகளும் உண்டு. நடிகர் கமல்ஹாசன் தான் இதுபோன்ற படங்களில் நடிப்பார் என்ற பேச்சுக்களை தவிடு பொடியாக்கியவர் ரஜினிகாந்த். மசாலாக்கள் நிறைந்த சினிமாவில் மட்டும் அல்ல, ரஜினிக்கே உரிய பாணியில் சிரிக்கும் முகத்தில் அழுகையை வரவைத்தவர்.

ஸ்டைலா கெத்தா கோர்ட் சூட் மட்டுமல்ல ஒரு படமுழுக்க பொறுப்பான அண்ணனா, கணவரா, நண்பரா, தொழிலாளியாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதேபோன்று இதே கூட்டணியில் வெளிவந்த எங்கேயோ கேட்ட குரல் எவர்கிரீன் படங்களில் அதுவும் ஒன்றாக திகழ்கிறது. 80களில் இதுபோன்ற கதைகளை மக்களின் உயிரோட்டமாக படம்பிடித்து காட்டிய பெருமை எஸ்.பி.முத்துராமனையே சேரும். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்களில் எஸ்.பி.முத்துராமன் இல்லாமல் இல்லை.

ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநராகவும் எஸ்.பி.முத்துராமன் இருந்தார். ரஜினிக்கு ஒரு முகம் மட்டுமல்ல பல முகங்களை கொண்டு திரையில் மாஸான வசனங்களால் ரசிகர்களின் மனதில் நீங்காட இடம்ப பெற வைத்திருப்பார். ரஜினிகாந்தை வைத்து 25க்கும் அதிகமாக படங்களை இயக்கியுள்ளார்.

எஸ்.பி.முத்துராமனும் ரஜினியும் இணைந்த முதல் திரைப்படம் காலத்திற்கும் மறக்க முடியாத நாளாக இன்று இருக்கும். 1977ல் இதே நாளில்தான் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ரஜினியின் நடிப்பு மட்டுமல்ல அவரது மேனரிசம் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும்.

ஹீரோவாக நடித்து வந்த சிவக்குமார் ப்ளே பாயாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ரஜினி ரொம்ப நல்லவராக நடித்த படம் இது. சம்பத், நாகராஜன் இருவரது கதாப்பாத்திரங்களுமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது என்றே கூறலாம். நாகர்கோவிலில் தெருவில் துணிவிற்பவர்கள், நண்பர்களான நாகராஜும் (சிவகுமார்) சம்பத்தும் (ரஜினிகாந்த்).

இருவரும் துணி கொள்முதலுக்காக சென்னைக்கு ரயிலேறுகிறார்கள். உடன் பயணிக்கும் முத்து (ஒய்.ஜி.மகேந்திரன்) திடீரென இறந்துவிட, அவர் சூட்கேஸில், ஏகப்பட்ட பணம். சிவகுமார், அதை அபகரித்துக் கொள்வார். ரஜினிக்கு அதில் விருப்பமில்லை. முத்துவின் சகோதரி புவனாவுக்கு (சுமித்ரா) இருவர் மீதும் சந்தேகம் எழுகிறது. இவ்வளவு விவரமான புவனா நாகராஜின் காதல் வலையில் விழுந்து ஏமாற்றப்படுவார். நாகராஜின் நல்லபிள்ளை போன்ற வில்லத்தனமும், பார்ப்பவரை எரிச்சலூட்டும் முகபாவனையோடு சம்பத் ஹீரோவாகவும் வாழ்ந்திருப்பார்கள்.

சிவகுமாரால் ஏமாற்றப்பட்ட புவனாவிற்கு திருமணமாகாமல் ஆண் குழந்தைப் பிறக்கும். அவருக்கு துணையாகச் சம்பத் இருப்பார். வெளியுலகிற்கு இவர்கள் கணவன் மனைவி போல் வாழ்வார்கள். வீட்டுக்குள் தனித்தனியாக வசிப்பார்கள். திருமணமாகி சில வருடங்களாகியும் நாகராஜுக்கு குழந்தை இல்லை. அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வரும்.இளையராஜா இசையில் பஞ்சு அருணாச்சலம் எழுதிய ‘விழியிலே மலர்ந்தது’,‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்தப் படத்தை பார்த்தால் வெகுஜன மக்களும் ரஜினியின் நடிப்பை கண்டு சிலாகிப்பார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews