திரைப்பட விழாவில் பாலுமகேந்திரா ஓடி ஓடி செஞ்ச காரியம்: மனுஷனுக்கு இம்புட்டு காதலா?

பாலு மகேந்திரா என்ற கேமரா காதலர் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் எவ்வாறு செதுக்கினார் என்பதற்கு இச்சம்பம் ஓர் உதாரணம். பாலுமகேந்திரா என்னும் திரைக்கலைஞன் கேமராவின் வழியாக மனித உணர்வுகளை படம்பிடித்துக் காட்டுவதில் கெட்டிக்காரர். சாதாரணமாக நாம் பார்க்கும் காட்சி அவரின் கண்களுக்கு மட்டும் கலைநயம் மிக்கதாகத் தெரியும். அதனை கேமராவில் படமாக்கும் போது அதற்கு உயிர் கொடுப்பது பாலுமகேந்திராவின் தனிச்சிறப்பு. திரையுலகின் சிறந்த ஒளிப்பதிவளார்கள் பலர் இவரின் மாணவர்களே.

ஒருசமயம் பெங்களுரில் சர்வதேச திரைப்பட விழா நடந்து கொண்டிருந்த சமயம் அது. அவ்விழாவில் பாலுமகேந்த்திராவும் பங்கெடுத்திருந்தார். படவிழாவில் பங்கேற்ற சமயத்தில் அங்கு திரையிடப்பட்ட ஒவ்வொரு படத்தின் முடிவிலும் பாலுமகேந்திரா திடீரென எழுந்து ஓடி வெளியே சென்று பின் வருவார்.

இதே போல் ஒவ்வொரு நாளும் நடைபெற்றது. அப்படி ஏன் ஓடுகிறார் என்பது அனைவருக்கும் விளங்கவில்லை. ஒருநாள் அவரது நண்பர்கள் அவரைப் பின்தொடர அவர் படம் முடிந்ததும் வேகமாகச் சென்ற அவர் பெங்களுரின் மெஜஸ்டிக்கின் மெயின் சாலையைக் கடந்து அந்தப் பக்கம் போனார்.

மனைவி பிரேமலதாவிற்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் : இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா

குப்தா மார்க்கெட் என்ற பகுதி அது. அந்தக் காம்பவுண்டிற்குள் நுழைந்த அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த போஸ்ட் பாக்சின் அருகில் சென்று நின்றார். தமது ஜோல்னாப் பையைத் திறந்து கத்தையாக இன்லண்ட் லெட்டர்களை எடுத்து அதிலிருந்து ஒன்றை உருவிக்கொண்டார். ஒரு நோட்டுப் புத்தகத்தை அடியில் கொடுத்து அந்தப் பெட்டியின் மீது வைத்து மளமளவென்று எழுத ஆரம்பித்தார்.

வேகமாக எழுதியவர் கடிதத்தை முடித்து நாக்கில் ஈரப்படுத்தி அதை ஒட்டி அந்தத் தபால் பெட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்தார். இப்போது அவர் முகம் மலர்ந்து , தமது கடமையை முடித்துவிட்ட திருப்தியில் இருந்ததுபோல் இருந்தது. பின் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு மதிய உணவுக்காக பக்கத்திலிருந்த ஓட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினார் பாலுமகேந்திரா.

இதற்கான காரணம் என்னவென்று அனைவரும் விழிபிதுங்கிக் கொண்டிருக்க அதற்கு விடை அவரின் மனைவியும், நடிகையுமான ஷோபாவின் மரணத்திற்குப் பிறகு விடை கிடைத்தது. ஷோபா பற்றிய கட்டுரையொன்றில் பெங்களூரின் இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவல் பற்றிக் குறிப்பிட்ட பாலுமகேந்திரா அவ்விழாவில் ஒவ்வொரு படம் முடிந்ததும் தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஷோபாவுக்கு உடனுக்குடன் கடிதம் எழுதித் தெரிவித்ததைக் குறிப்பிடுகிறார்.

சுமார்  ஐம்பது கடிதங்கள் எழுதினதாகவும், ஒவ்வொன்றையும் அந்தப் படங்கள் முடிந்து சில நிமிடங்களுக்குள் எழுதி போஸ்ட் செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு அவர் எழுதிய கடிதங்கள்தான் பின்னாளில் ஷோபாவை அவர்மீது காதல் வயப்படுத்தியதாகவும் அந்தக் கட்டுரையில் பாலுமகேந்திரா தெரிவித்திருக்கிறார். அப்பவே காதல் கோட்டை பாணியில் காதலை வளர்த்த கலைஞன் யாரென்றால் அது பாலுமகேந்திரா என்னும் திரை ஜாம்பவான் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews